Wednesday, March 23, 2011

இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!

இன்று வலையுலகின் போராளி சாந்தி அம்மையார் வெளியிட்டுள்ள ஒரு இடுகையை வாசித்தபோது, இவரது அறிவாற்றலையெண்ணி வியக்காமல் Justify Fullஇருக்க முடியவில்லை; அத்துடன், கொப்பளிக்கும் கோபத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிற நகைச்சுவை உணர்வையும் கூட...!

நஜீபா அக்தர் = சேட்டைக்காரன் ??

இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!

பல கூகிள் தமிழ்க்குழுமங்களில் நான்காண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். அப்படியொரு குழுமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்தபோது, "தமிழமுதம்" குழுமத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்ததே அதன் நிர்வாகியான சாந்தி அம்மையார் தான். இப்போது இப்படியொரு இடுகையை எழுதியிருப்பதன் மூலம் அவர் நிரூபித்திருப்பது - அவர் சொல்வதெல்லாம் பொய்; பொய்; பொய் தவிர வேறில்லை!

அந்தக் குழுமத்தில் ஆரம்பத்தில் இணைந்த பல உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டாலும், நான் மட்டும் கொஞ்ச நாட்கள் தாக்குப்பிடித்தேன். பெரும்பாலானோரின் கருத்துக்களோடு ஒவ்வாமை இருந்ததால், எந்தக் குழுமத்திலும் நான் அதிகம் எழுதியதில்லை. எனது வலைப்பூவிலும் அதிகம் எழுதுவதில்லை. இது வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை. தற்செயலானது; இயல்பாக நிகழ்ந்தது என்பது மட்டும் உண்மை. மேலும் எனது பணி, மேற்படிப்பு மற்றும் குடும்பத்தில் மரணம் என சில இயல்பான காரணங்கள் நான் விரும்பினாலும் எழுத அனுமதிக்கவில்லை. 2008-ல் எனது மின்னஞ்சல் களவாடப்பட்டபோது, நிறுத்தி வைத்திருந்த நான், சின்னத்துளிகளை எழுதிக்கொண்டிருப்பது கொஞ்ச காலமாகத்தான்.

வலையுலகில்தானே குழுமங்களும் இருக்கின்றன?

கூகிள் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இவரது இடுகையிலுள்ள வன்மமும், இவர் அவிழ்த்து விட்டிருக்கிற பொய்மூட்டைகளும் புதிதல்ல. ஒருவரை நட்பாக்கிக் கொள்ள தனிமடல் மற்றும் மின்னரட்டை மூலம் தொடர்பு கொள்வது, "உனக்கு யாராவது தனிமடல் எழுதுகிறார்களா? மின்னரட்டையில் என்ன பேசுகிறார்கள்?" என்று கேட்டு மிகவும் அக்கறையுள்ளவர் போல நடிப்பது; "அவன் ரொம்ப மோசம்; எப்படியெல்லாம் மடல் எழுதியிருக்கிறான் பார்," என்று யாரோ யாருக்கோ எழுதிய மடலையே அவர்களது அனுமதியில்லாமல் பிறருக்கு அனுப்புவது, அதே போல மற்றவர்களிடமிருந்து நமக்கு வருகிற மடல்களை அனுப்பச்சொல்லி நச்சரிப்பது என்று படிப்படியாகத் தனது உண்மை உருவத்தை வெளிக்கொணர்வார்.

அப்புறம், நாம் எழுதாததையும், சொல்லாததையும் சொல்லி, கோள்மூட்டி சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பார்.

இது அபாண்டமல்ல! 200 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள எந்த கூகிள் குழுமங்களிலும் இவர் இருந்திருப்பார். அங்கே விசாரித்தால், நான் கூறியவை அனைத்தும் கண்டிப்பாகச் செய்திருப்பார். (சில குழுமங்களில் அதற்கு மேலும் செய்திருப்பார்.) கடைசியாக இவர் இருந்த குழுமத்திலும் இவருக்கு நிர்வாகத்தின் சார்பில் கடும் கண்டனம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிற குழுமங்களிலிருந்து இவரை விலக்கியிருக்கிறார்கள் அல்லது விலக வற்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. இதை அவர் மறுக்கலாம்; ஆனால், இவர் இருந்த பெரும்பாலான குழுமத்தின் நிர்வாகிகளால் மறுக்க முடியாது.

ஏன், இதை வாசிக்கிறவர்கள் ஏதேனும் பெரிய குழுமத்திலிருந்தால், நான் சொல்வதை மறுக்க மாட்டார்கள்.
எல்லாக் குழுமத்திலும் நிர்வாகிகளோடு சண்டைபோடுவதில் அம்மையார் சளைத்ததேயில்லை. நிர்வாகியின் கருத்துக்கு ஒத்த கருத்து உடையவராக எவரேனும் இருந்தால், அந்த உறுப்பினர் பாடும் திண்டாட்டம் தான். பெரும்பாலான குழுமங்களில் பெண் நிர்வாகிகளும் இருக்கிறார்கள் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆக, ஆண்-பெண் என்றோ, நிர்வாகி-உறுப்பினர் என்றோ எவ்வித சலுகையும் காட்டாமல், முணுக்கென்றால் சண்டை போடுபவர் என்பதற்கான ஆதாரங்களை அந்தந்தக் குழுமங்களில் சென்று பார்க்கலாம்.

தமிழமுதம் குழுமத்தில் பல பிரபல பதிவர்கள் இருக்கின்றனர். அவர்களில் யார் சாந்தி அம்மையாரின் பக்கம் என்று அந்தக் குழுமத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சாந்தி அம்மையார் கவனத்திற்கு!

மேற்கூறியவற்றில் நான் ஒரு பொய் எழுதியிருந்தால் கூட, நீங்கள் தாய்லாந்தில் இருந்தே என்மீது வழக்குப் போட முடியும் தெரியுமா? அப்படி நான் இட்டுக்கட்டி எழுதியிருந்தால் என் மீது நீங்கள் அவதூறு வழக்குத் தொடர முடியும். (தமிழமுதம் குழுமத்திலேயே கூட வழக்குரைஞர்கள் உள்ளனர் என்பதும் எனக்குத் தெரியுமே. அதில் ஒருவரைப் பற்றிக் கூட நீங்கள் தனிமடலில் பலருக்கு.....ஞாபகம் வருகிறதா?) அட ஆமாம், ஆள்மாறாட்ட வழக்கும் போடலாம்! :-)

நெஞ்சில் துணிவும், நேர்மைத் திறனும் உள்ள பெண்மணியாயிருந்தால், cyber crime-க்கு புகார் கொடுங்கள். அவர்கள் நான் பெண்ணா, ஆணா, நஜீபாவா, சேட்டைக்காரனா, என்று கண்டுபிடிப்பதோடு நீங்கள் பசுவா, பசுத்தோல் போர்த்திய புலியா என்பதையும் தெளிவுபடுத்த உதவி செய்வார்கள்.

உங்களது மின்னஞ்சல்/மின்னரட்டை விளையாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சாட்சியாக வரவும் தயார்!
உங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தருகிறேன். Buzz-லும் வலைப்பதிவிலும் வீரத்தைக் காட்டுகிற நீங்கள், சட்டப்படி என் மீது புகார் அளியுங்கள். முடியாவிட்டால் பகீரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள்!

இது எனது பகீரங்கமான சவால்! தயாரா?

அன்புள்ளங்களே!

சட்டபூர்வமாக இது ஒரு ஆவணமாகக் கருதப்படும் என்பதால், பின்னூட்டமிடும் வசதியை எடுத்திருக்கிறேன். ஆர்வக்கோளாறில் எவரெனும் எதையோ எழுதி, சாந்தி அம்மையார் என் மீது புகார் கொடுத்தால், அதில் அவர்களும் சம்பந்தப்படுவதை நான் விரும்பவில்லை. புரிதலுக்கு நன்றி!

Tuesday, March 8, 2011

தொப்பிதொப்பி-தலையில் இடிவிழ...!

தமிழோடு உறவாடுகிற தருணங்களை அளிக்கிற இந்த இணையத்தில் சில அருவருப்புக்கணங்களுக்குள் ஆட்பட நேர்ந்து விடுவதும் உண்டு. அத்தகைய ஒரு உறுத்தலை இன்று உணர்வதற்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட பெரும்பாலான இடுகைகளிலிருந்து மாறுபட்டதாய், அதிமேதாவித்தனமாய், அரைகுறையாய், அவசர அவசரமாய் எழுதப்பட்ட "உலக மகளிர் தினம்- இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த " என்ற ஒரு இடுகை ஏற்படுத்தியிருக்கிறது. நரகலைத் தீண்டிய அருவருப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், இது போன்ற இடுகைகளுக்கு எதிர் இடுகை எழுதுவதில் தவறில்லை என்றே உணர்கிறேன்.

தொப்பிதொப்பியின் பதிவின் ஒவ்வொரு பத்திக்கும் பதிலளித்து இதை நீளமாக்கவோ, வாசிக்கிறவர்களின் நேரத்தை விரயமாக்குவதோ எனது குறிக்கோள் அன்று. அவருக்கு உலக மகளிர் தினத்தின் வரலாறு கூட தெரியவில்லை என்பதை தனது இடுகையின் முதல்பத்தியிலேயே வெளிப்படையாக்கியிருக்கிறார். அவ்வகையில், அந்த இடுகை ஒரு எதிர் இடுகை எழுத உகந்ததுதானா என்ற கேள்வியும் எழாமலில்லை. பிரபலங்களோடு மோதி பிரபலமடைய விரும்புகிற முயற்சியாகவும் இதனைப் பிறழ்ந்து காண வாய்ப்பிருப்பதையும் உணர்கிறேன். இருப்பினும், எழுதாமல் இருந்தால், சரியானதைச் செய்யாத தவறைச் செய்ததாகும் வாய்ப்புள்ளது.

தொப்பிதொப்பி என்ற இந்த அதிபுத்திசாலி உதிர்த்திருக்கிற சில அற்புதமான கருத்துக்கள்:

1. ஆணின் சுயமரியாதையை அழிந்துவருகிற விலங்குகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இதை வாசித்துப் பின்னூட்டமிட்ட ஆண்களில் ஒருவர் கூட (நான் இறுதியாகப் பார்த்தவரையிலும்) இதை ஆட்சேபிக்கவில்லை. ஒருவேளை, தொப்பிதொப்பியின் கூற்றுப்படி அவர்கள் தம்மை விலங்குகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் போலும்.

2. பெண்ணுக்கு உரிமை வழங்கியதால், இன்று உலக நாடுகளின் சதியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது.

கிழக்கு இந்தியக் கம்பனி இந்தியாவுக்கு வந்து ஆக்கிரமித்ததற்கு பெண்ணுரிமைதான் காரணமோ?

3. இந்தியாவைப் பிடித்த ஊழல் என்னும் சீரழிவுக்கு பெண் என்ற பேய்தான் காரணம். (இதற்கு சான்றாக, பல பெண் அரசியல்வாதிகளின் படங்களைப் போட்டு வாசிக்க வந்தவர்களை பிரமிக்க வைத்திருக்கிறார் தொப்பிதொப்பி!)

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி, முதல் பிரதமர், இந்திய மாநிலங்களின் முதல் முதலமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். எத்தனை பெண்கள்?

இப்படி, ஒன்று, இரண்டு, மூன்று என்று பட்டியலிட்டவருக்கு, தாத்தா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறதாம். "இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த."

இப்படி அரைகுறையாகத் தகவல்களை வைத்துக்கொண்டு, பெண்களை இழிவாகப் பேசுபவர்களைப் பற்றி என் பாட்டி சொன்னது: இவனுங்க தலையிலே இடிவிழ...!"

அடுத்து ஆண்களே சிந்தியுங்கள் (?!) என்று ஒரு அறைகூவல் விடுத்து, அதிலே......

ஆண்களுக்கு உரித்தான இடத்தில், தங்களது கவர்ச்சியைப் பயன்படுத்தி பெண்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களாம்.

இந்த இடுகைக்குப் பின்னூட்டம் போட்ட பதிவர்கள் மட்டுமின்றி, தொப்பிதொப்பிக்கு ஒத்து ஊதுகிற புண்ணியவான்கள் இனிமேல் சினிமா நடிகைகளின் மார்புப்பிளவும், தொப்புளும் தெரிகிற படம்போட்டு இனிமேல் இடுகை எழுத மாட்டார்கள் என்று நம்புவோமாக. உங்களுக்குத்தான் பெண்களின் கவர்ச்சி வெறுப்பூட்டுகிறதே; அப்புறம் எதற்கு அத்தகைய படங்களை உபயோகப்படுத்துகிறீர்கள்?

தொப்பிதொப்பியின் தாத்தா காலத்தில் பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள். தொப்பிதொப்பியின் பாட்டி, எப்போது தாத்தா அழைத்தாலும் போய்ப்படுத்து, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். வீடுகூட்டி சுத்தம்செய்து, துணிதுவைத்து, சமைத்துப்போட்டு, மாமியார் மாமனார் படுக்கையில் போகிற பீயைத் துடைத்துக்கொண்டிருக்க வேண்டும். தாத்தா குடித்துவிட்டு வந்து நடுத்தெருவில் போட்டு உதைத்தால், பாட்டி அழுதுகொண்டு, அலறாமல், திருப்பி அடிக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இப்போது, இந்தக்கதையில் உள்ள பல சம்பவங்கள் மாறாமல் இருப்பதாவது தெரியுமா? பிறகு, என்ன மாறியிருக்கிறது? இப்போது பெண் வெளியே போகிறாள்; ஆணுக்கு நிகராய் பணம் ஈட்டுகிறாள். அவனைப்போலன்றி, சம்பாதித்த பணத்தைச் சேமித்து, குடும்ப எதிர்காலத்தை சமைக்கிறாள். அது இவர்கள் கண்களை உறுத்துகிறதோ?

ஆமாய்யா, நீங்கள் போட்டிருப்பதுபோல, பெண்கள் புகைபிடிக்கிறார்கள்; மதுவருந்துகிறார்கள். இன்னும் இருக்கிறது உங்களது வயிற்றில் கலக்கம் ஏற்படுத்த! ஆனால், இவற்றைச் செய்யுமளவுக்குத்தூண்டுதலை ஏற்படுத்துகிற சூழலை உருவாக்கியது ஆணா பெண்ணா?

இந்தியாவின் எந்தச் சட்டமும் பெண்கள் புகைபிடிப்பதோ, மதுவருந்துவதோ கூடாது என்று சொல்லவில்லை. பெரும்பாலான பெண்கள், தங்களுக்குக் கிடைக்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும்போது, விதிவிலக்காக சில பெண்களும் தவறான வழிக்குப்போகத்தான் செய்வார்கள். அதை சட்டமே கேட்காதபோது, வேறு யார் கேட்பது?

போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்கடா!

இன்று பல பிரபல பெண்பதிவர்களின் இடுகைகளை வாசித்தேன். இந்த இடுகையையும் வாசித்து, சிலரிடம் மின்னரட்டையிலும், சிலரிடம் மின்னஞ்சலிலும், உள்ளூர்வாசிகளிடம் தொலைபேசியிலும் சொன்னேன். ஆனால், அவர்களுக்கு எதிர் இடுகை எழுதமுடியாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு பொதுவான காரணம் இருந்தது. "தொப்பிதொப்பி ஒரு லூஸு! கண்டுக்காதீங்க!!"

சரி, அவங்களை விட்டு விடலாம்!

"ஐயோ, என் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்துக்காக போராடுகிற அழகு இவ்வளவுதான்! இந்த மாதிரி சில பெண்களால் தான் வலையுலகில் பெண்களை மட்டம்தட்டி எழுதுகிற துணிச்சல் பலருக்கு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

தொப்பிதொப்பிக்கு ஒரு வேண்டுகோள்! ஒருநாள் அவர் தன்வீட்டுப்பெண்களோடு பிறிதொரு சந்தர்ப்பதில் உட்கார்ந்து, அவர்கள் வெளியே தெருவில் போய்வருவதற்குள் படுகிற இம்சைகளை, பார்வைத்துகிலுரிதல்களை, வார்த்தைகளாலான வன்புணர்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வாராக. இதுகுறித்து இன்னும் விபரமாக எழுதலாம்!

பெண்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தொப்பிதொப்பியையும், அந்த இடுகைக்குப் போய் ஆஜர் போட்ட தொப்பிதொப்பியின் தோழர்களையும், பெண் பதிவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

நான் இப்படிச் சொல்வதை வாசித்து பலர் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். இது நடக்காமலும் போகலாம். அதனால், நஷ்டம் எங்களுக்கு, அதாவது பெண்களுக்கு அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இறுதியாக......நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் தொப்பிதொப்பி!

எங்களைத் தடுத்து நிறுத்துகிற வல்லமை உங்களுக்கோ, உங்களது ஜால்ராக்களுக்கோ கிடையாது.

மகளிர் உலகம் மலர்ந்தே தீரும்! பாவம் நீங்கள்!!!