சிறுபிராயத்தின் ஆசைகள் சிறகடித்த போதிலும், பெற்றொருக்காகவும் உடன்பிறந்தோருக்காகவும் குடும்ப பாரத்தைச் சுமக்கிற பெண்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்! ஆனால், அவர்களின் மீது வண்ணவிளக்குகளின் வெளிச்சம் விழாததால், அவர்களது வியர்வையும் இரத்தமும் இன்னும் குழாய்த்தண்ணீரோடு ஒப்பிடப்படவில்லை.
ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணின் பெயரைத் தன் மீது எழுதிக்கொண்டு, அவளுக்கு அணிவிக்க விரும்பிய செருப்புமாலையைத் தான் அணிந்து கொண்டு ஒரு ஆண் கழுதை மீது ஏறி ஊர்வலம் போனபோது, அவன் தன்னைப் பெற்ற தாயின் கருப்பையைக் கொச்சைப்படுத்தியிருப்பதை மீசை வைத்த மற்ற ஆண்கள் உணரவில்லை.
பணத்துக்காக நடிகைகள் எதையும் செய்வார்கள் என்று ஒரு இயக்குனர் சொன்னபோது, அந்த இயக்குனருக்கு இருந்த அரசியல் தொடர்பு காரணமாக, பொதுமக்களின் பிரதிநிதிகளோ கலாச்சாரத்தின் காவலர்களோ புருவத்தைக் கூட நெரிக்கவில்லை. அந்த இயக்குனர் வருத்தம் தெரிவித்ததும் அந்த சம்பவம் மறக்கப்பட்டது; மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி கருத்துச் சொன்னதும் கோவலர்களுக்குக் கோபம் வந்து விட்டது. சீழ் படிந்திருந்த நெற்றிக்கண்களைத் திறந்தபடி, சில போலிக்கடவுளர்கள் பொத்துக்கொண்டு வந்த சினத்தால் அனல்பறக்கும் நீதிமன்ற வழக்குகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். மேடைகளில் ஆபாச வார்த்தைகளை அள்ளியள்ளி இறைத்தனர்.
கண் துடைக்கப் பயன்படாத கைக்குட்டைகளை வாயில் அடைத்துக்கொண்டு வாளாவிருந்தது சாமானியனின் சமூகம்! வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்! காசுக்காய் கடைவிரித்த பத்திரிகைகள், அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.
உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!
ஓட ஓட விரட்டி, அந்தப் பெண்ணும் அரசியலுக்குள் நுழைந்ததும், தரங்கெட்ட வார்த்தைகளை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர் சில உத்தமபுத்திரர்கள். அவளது கடந்தகாலப் பக்கங்களை எடுத்துத் திருத்தி எழுதி திருப்தியடைந்து கொண்டிருக்கின்றனர் சில தில்லுமுல்லுக்காரர்கள்!
அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.
போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!
ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணின் பெயரைத் தன் மீது எழுதிக்கொண்டு, அவளுக்கு அணிவிக்க விரும்பிய செருப்புமாலையைத் தான் அணிந்து கொண்டு ஒரு ஆண் கழுதை மீது ஏறி ஊர்வலம் போனபோது, அவன் தன்னைப் பெற்ற தாயின் கருப்பையைக் கொச்சைப்படுத்தியிருப்பதை மீசை வைத்த மற்ற ஆண்கள் உணரவில்லை.
பணத்துக்காக நடிகைகள் எதையும் செய்வார்கள் என்று ஒரு இயக்குனர் சொன்னபோது, அந்த இயக்குனருக்கு இருந்த அரசியல் தொடர்பு காரணமாக, பொதுமக்களின் பிரதிநிதிகளோ கலாச்சாரத்தின் காவலர்களோ புருவத்தைக் கூட நெரிக்கவில்லை. அந்த இயக்குனர் வருத்தம் தெரிவித்ததும் அந்த சம்பவம் மறக்கப்பட்டது; மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி கருத்துச் சொன்னதும் கோவலர்களுக்குக் கோபம் வந்து விட்டது. சீழ் படிந்திருந்த நெற்றிக்கண்களைத் திறந்தபடி, சில போலிக்கடவுளர்கள் பொத்துக்கொண்டு வந்த சினத்தால் அனல்பறக்கும் நீதிமன்ற வழக்குகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். மேடைகளில் ஆபாச வார்த்தைகளை அள்ளியள்ளி இறைத்தனர்.
கண் துடைக்கப் பயன்படாத கைக்குட்டைகளை வாயில் அடைத்துக்கொண்டு வாளாவிருந்தது சாமானியனின் சமூகம்! வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்! காசுக்காய் கடைவிரித்த பத்திரிகைகள், அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.
உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!
ஓட ஓட விரட்டி, அந்தப் பெண்ணும் அரசியலுக்குள் நுழைந்ததும், தரங்கெட்ட வார்த்தைகளை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர் சில உத்தமபுத்திரர்கள். அவளது கடந்தகாலப் பக்கங்களை எடுத்துத் திருத்தி எழுதி திருப்தியடைந்து கொண்டிருக்கின்றனர் சில தில்லுமுல்லுக்காரர்கள்!
அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.
போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!
72 comments:
well said
அப்படிப் போடுங்க அருவாள! :-)
சோ கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் தப்பில்லைன்னு ஒத்துக்கிறீங்க...இவளப் பத்தி ஊருக்கே தெரியும், நீங்க செந்தமிழ்ல எழுதிட்டா உண்மை பொய்யாகிடுமா?...என்னங்க நீங்க...
உங்களப்பாத்து பாவம்ன்னு பரிதாபப் படுவதை விட வேறு என்ன செய்ய முடியும்....
துளசி கோபால் said...
//well said//
நன்றிங்க! முதல் பின்னூட்டத்துக்கு!
சேட்டைக்காரன் said...
//அப்படிப் போடுங்க அருவாள! :-)//
சேட்டை! வாங்க!! :-))
பருப்பு The Great said...
//சோ கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் தப்பில்லைன்னு ஒத்துக்கிறீங்க...//
தப்புன்னு சொல்லிட்டா, ஆம்பிளைங்கெல்லாம் பொம்பிளைங்களை அக்கா,தங்கச்சி போலப் பார்க்க ஆரம்பிச்சிருவீங்களா? :-))
//இவளப் பத்தி ஊருக்கே தெரியும்,//
அதான் உண்மை! அதைத் தான் முதல் பாராவுலே எழுதியிருக்கேன். பொதுவாழ்க்கையில் இருக்கிற பெண்களைப் பத்தித் தான் ஆராய்ச்சி பண்ணுவீங்களா? :-)
//நீங்க செந்தமிழ்ல எழுதிட்டா உண்மை பொய்யாகிடுமா?...என்னங்க நீங்க...//
பெயருக்கேத்த மாதிரி பெரிய பருப்பு மாதிரி பேசுறீங்களே? இன்றைக்கு ஒழுக்கக்கேடு அதிகமானதுக்குக் காரணம் ஆண்களா பெண்களான்னு ஒரு நிமிஷம் யோசிங்க முதல்லே! :-)
//உங்களப்பாத்து பாவம்ன்னு பரிதாபப் படுவதை விட வேறு என்ன செய்ய முடியும்....//
ஹாஹா! சின்னப்புள்ளை மாதிரி பேசிட்டிருக்கீங்க! :-)))
May 19, 2010 6:07 PM
"அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்."
நல்லா சொன்னீங்க நஜீபா ...
கருத்து சுதந்திரத்தோட வெற்றிங்கிற வகையிலே எனக்கும் சந்தோசம் ....
--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
முதலில் நன்றி.
ரெண்டு நாட்களாக நான் மனம் குமைவது இதற்காகத்தான்.. வெள்ளைத்தோல் என்று எழுதுபவர்களைச் சொல்லச்சொல்லுங்கள் வெள்ளைத்தோலாக அவர் பிறந்தது அவர்குற்றமா..
நீங்கள் எழுதியது போல் எழுதவராததால் யோசித்தே தவிர்த்தேன்..
நல்ல தலைப்பு..
ம்ம்ம்ம்ம்ம்... நிறைய எழுதுங்கள்!
ஒழுக்ககேடு அதிகமானதுக்கு காரணம் யாரு?....நாகரீகம் ந்கர பேர்ல உடம்புல உள்ள எல்லா பாகமும் தெரியும் படி உடை உடுத்துவது யாரு? எந்த ஆம்பளைங்க இந்த மாதிரி கன்றாவியா டிரஸ் போடுறது....நாங்களும் ஸ்லீவ் லேஸ் போட்டு, இடுப்பு, தொப்புள் தெரியும் படி சட்ட போட்டு, தொடைக்கு மேல ஏத்திக்கட்டி ரோட் ல வந்த உங்களுக்கு எப்டி இருக்கும்? ஒன்னே ஒன்னு கேக்குறேன் இந்த மாதிரி உடல் உறுப்புகள் தெரியும் படி டிரஸ் பண்ணி அவ அப்பா, அண்ணன், தம்பி முன்னாடி நிக்கும் போது, எனக்கு என்ன தெரியுமோ அதே தான அவங்களுக்கும் தெரியும்..ஒரு அப்பன்/சகோதரன் தன் சகோதரியை பார்க்கும் கோலமா அது? இது தான் நீங்கள் விரும்பும் சுதந்திரமா? நீங்க அதைத்தான் விரும்புகிறீர்களா?
/////////வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்!//////////////
இதுக்குமேல் துகிலுரிய என்ன இருக்கு? அதான் சில பெண்கள் துகிலுரிஞ்ச மாதிரி தான ரோட்ல வர்றாங்க...
///////////////அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.//////////////////
வெறும் பணத்துக்காக மார்பு தெரிய போஸ் குடுத்தது யாரு?
நியோ said...
//நல்லா சொன்னீங்க நஜீபா ... கருத்து சுதந்திரத்தோட வெற்றிங்கிற வகையிலே எனக்கும் சந்தோசம் ....//
உண்மை! கருத்துச் சுதந்திரத்தின் வெற்றியே இது! நன்றி நண்பரே!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
//முதலில் நன்றி. ரெண்டு நாட்களாக நான் மனம் குமைவது இதற்காகத்தான்.. வெள்ளைத்தோல் என்று எழுதுபவர்களைச் சொல்லச்சொல்லுங்கள் வெள்ளைத்தோலாக அவர் பிறந்தது அவர்குற்றமா..//
அது தானே?
இது அதீதமான வெறுப்பின் வெளிப்பாடு என்பதோடு அநாகரீகத்தின் உருவகமாகவும் தொனித்ததாலேயே இந்த இடுகையை எழுதினேன்.
//நீங்கள் எழுதியது போல் எழுதவராததால் யோசித்தே தவிர்த்தேன்..நல்ல தலைப்பு..//
நீங்கள் நேரம் செலவிட்டு கருத்துக் கூறியதற்கு மிக்க நன்றி! தலைப்பைத் தேட அதிக நேரம் செலவழிக்கவில்லை! :-)
தமிழ் பிரியன் said...
//ம்ம்ம்ம்ம்ம்... நிறைய எழுதுங்கள்!//
கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி!
பருப்பு The Great said...
//ஒழுக்ககேடு அதிகமானதுக்கு காரணம் யாரு?....நாகரீகம் ந்கர பேர்ல உடம்புல உள்ள எல்லா பாகமும் தெரியும் படி உடை உடுத்துவது யாரு?//
உங்களது வலைப்பதிவைப் பார்த்தேன். ஒழுக்கத்துக்கு உடைகள் தான் அளவுகோல் என்று பேசுகிற நீங்கள் அங்கு நடிகைகளின் படங்களைப் போட்டுத்தான் இடுகை எழுதுகிறீர்கள்! இரட்டை நிலை என்பதற்கு உங்களை விடவும் சிறந்த உதாரணம் தேவையில்லை நண்பரே! :-) நடிகையென்றால் அவ்வளவு கேவலமென்றால், அவள் படம் போடாமல் ஒரு இடுகை எழுதுங்கள் பார்க்கலாம்!
// எந்த ஆம்பளைங்க இந்த மாதிரி கன்றாவியா டிரஸ் போடுறது....நாங்களும் ஸ்லீவ் லேஸ் போட்டு, இடுப்பு, தொப்புள் தெரியும் படி சட்ட போட்டு, தொடைக்கு மேல ஏத்திக்கட்டி ரோட் ல வந்த உங்களுக்கு எப்டி இருக்கும்?//
பெண் அடக்க ஒடுக்கமாக இருந்த காலத்தில் ஆண்கள் எல்லாரும் மிகவும் யோக்கியமானவர்களாகவா இருந்தார்கள்? ஒரு நாட்டின் மீது படையெடுத்து வென்றால் கூட பெண்களையும் ஆடுமாடுகளைப் போல ஓட்டிக்கொண்டு வந்ததை வீரம் என்று பேசியதில்லையா? உடைக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை!
//ஒன்னே ஒன்னு கேக்குறேன் இந்த மாதிரி உடல் உறுப்புகள் தெரியும் படி டிரஸ் பண்ணி அவ அப்பா, அண்ணன், தம்பி முன்னாடி நிக்கும் போது, எனக்கு என்ன தெரியுமோ அதே தான அவங்களுக்கும் தெரியும்..ஒரு அப்பன்/சகோதரன் தன் சகோதரியை பார்க்கும் கோலமா அது? //
சரி, நீங்கள் உங்களது வலைப்பதிவை உங்கள் சகோதரிகளிடமோ, தாயாரிடமோ காட்டினீர்களா? முதலில் காட்டுங்கள்! :-)
//இது தான் நீங்கள் விரும்பும் சுதந்திரமா? நீங்க அதைத்தான் விரும்புகிறீர்களா?//
ஆடைக்குறைப்போ, பெரும்பாலான ஆண்களை மாதிரி ஒழுக்கம் கெட்டு அலைவதோ அல்ல சுதந்திரம்! அது குறித்து யாரும் பேசவில்லை! ஆனால், ஒரு பெண்ணுக்கு மனதில் பட்டதை சொல்ல உரிமையிருக்கிறது. அதைச் சொன்னால் அதையும் அவளது ஒழுக்கத்தையும் பிணைத்துப் பேசுகிற குதர்க்கமான புத்தி பல ஆண்களுக்கு இருக்கிறது என்பதையே உங்களது பொருத்தமற்ற விவாதம் உறுதிப்படுத்துகிறது. வருகைக்கு நன்றி!
/////////வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்!//////////////
இதுக்குமேல் துகிலுரிய என்ன இருக்கு? அதான் சில பெண்கள் துகிலுரிஞ்ச மாதிரி தான ரோட்ல வர்றாங்க...
///////////////அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.//////////////////
வெறும் பணத்துக்காக மார்பு தெரிய போஸ் குடுத்தது யாரு?
//நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி //
Great assesment. Great article .
I support her in her thinking but never support in her decision to join political . but i admit there are sarcastic comments by MEN against her.
எழுத்துச்சுதந்திரம்
கருத்துச்சுதந்திரம் என்கின்ற பருப்பையெல்லாம் விடுங்க
சொன்ன பொருள் என்னான்னு பாருங்க
நடு நிலையோடு சிந்தித்து பேசுங்க
பெண் சுதந்திரம் என்றால் என்ன?
வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களுக்காக எழுதுங்கள்
விதவைக்கு மறுமனம் வேண்டும் என்று எழுதுங்கள்
பாலிய திருமணத்தை எதிர்த்து எழுதுங்கள்
இது போல எவ்வளவோ இருக்க
அதையெல்லாம் விட்டுட்டு தொட தெரிய உடை உடுத்துவதும் கண்டவனோட படுக்குறதும் தான் சுதந்திரமா?
நான் மறுபடியும் சொல்றேன், வெறும் பணத்துக்காக உடலைக் காட்டி போஸ் கொடுக்கும் நடிகைகளுக்கு இல்லாத வெக்கம், அப்படத்தை பார்க்கும்/உபயோகப்படுத்தும் எனக்கு தேவை இல்லை...நடிகை படம் இல்லாமல் பதிவு எழுதுவது மிகச்சுலபம்..
என்னால் என் வீட்டுப் பெண்களுக்கு என் வலைப்பூ வை தைரியமாக காட்ட முடியும்..நான் எந்த தவறானவாக்கியமும் எழுதவில்லை..ஒரு பதிவைத் தவிர..அதிலும் நான் U/A என்று போட்டுள்ளேன்...அன்னையர் தினத்துக்கு என்னால் முடிந்த அளவு அன்னையர் பெருமை சொல்லி இருக்கிறேன் ...ஆனால் (மன்னிக்கவும் வேறு வழியில்லை) உங்களால் நான் குறிப்பிட்டது போல் உடையணிந்து உங்கள் வீட்டு ஆண்கள் முன் ஒரு நிமிடம் நிற்க முடியுமா? முடியாது...நீங்கள் குடும்பப்பெண்...
பெண் விடுதலைக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிராக உங்கள் குரல் ஒலிக்கட்டும்...இது போன்ற பெண்களுக்கு வக்காலத்து வாங்கி உங்களின் மதிப்பை நீங்களே குறைக்காதீர்கள்...
என் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி...
கடைசியாக ஒன்னே ஒன்னு
There are three sides of Arguments..
Your side
My side and
The Right side
நல்ல வீச்சு உள்ள கட்டுரை.
சாட்டையடியாக உள்ளன வார்த்தைகள்.
ஆனால் யாரும் புனித பிம்பங்கள் இல்லையென்பதை மறக்கவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
நிறைய எழுதுங்கள் :)
ஒரு பெண்ணை இழிவு படுத்தணுமுன்னா வேற எதுவும் யோசிக்காம நேரா அவ ஒழுக்கம் கெட்டவள் என்ற கல்லைத் தூக்கிப் போடும் குணம் இங்கே இந்தியாவில் அதுவும் குறிப்பாத் தமிழ்நாட்டில் பார்க்கிறேன்.
அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னா..... சொல்ற நீ அந்தக் கெட்ட இடத்துலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தே? நீ ஏன் அந்த மாதிரி இடத்துக்குப் போனே? இப்படியெல்லாம் யாரும் கேட்டுக்கமாட்டாங்க. ஒழுக்க சிகாமணி சொன்னா எல்லாரும் தலை ஆட்டி ஆமோதிக்கும் குணம்.
நான் சென்னையில் கடந்த ஜூன் முதல் ஏப்ரல் வரை இருந்தேன். எங்கேயும் 'ஆபாசமா' உடை அணிந்து வந்த எந்தப் பெண்களையும் பார்க்கலை. ஆனால் அசிங்கமா, வெட்கம், மானம் கொஞ்சம்கூட இல்லாம தெருக்களிலே இத்தனை போக்குவரத்து, ஆள் நடமாட்டம் இருக்கும் சாலைகளிலும் 'ஒன்' போகும் மாக்களைக் கண்டு மனம் நொந்தேன்.
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால்........
என்னவோ போங்க...ப்ச்
good post :) niraiya eluthunga :)
//போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!//
பருப்புக்கே வெறுப்பா !
ரொம்ப பாதிக்கப் பட்ட மாதிரி தெரியுது.
கூல் டவுன். ராஜ வம்சத்தை வழிமொழிகிறேன்
//உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!//
அருமை. குஷ்பு சொன்னது என்ன அடிப்படையில் என்று தெரிந்து கொள்ளாமல் பிதற்றுபவர்களை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.
முதல் முறை வாசிக்கிறேன். தீர்க்கமான எழுத்து.
உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண் திமிர்களைக் கண்டுகொள்ள வேண்டாம்.
ADAM said...
//very good//
நன்றிகள் பல!
Raveendran Chinnasamy said...
//Great assesment. Great article . I support her in her thinking but never support in her decision to join political . but i admit there are sarcastic comments by MEN against her.//
Thank You for your feedback. Everyone has the right to choose his/her action provided if it is within the parameters of the democratic values.
The undue sarcasam that some men are showering on her is nothing but their inability to cope up with the reality that a woman can still survive frivolous and unreasonable criticism and reach a larger stage.
ராஜவம்சம் said...
//எழுத்துச்சுதந்திரம் கருத்துச்சுதந்திரம் என்கின்ற பருப்பையெல்லாம் விடுங்க//
ஏன் விடணும்? எழுத்துச் சுதந்திரம் என்ன ஆண்களின் ஏகபோக சொத்தா? முதலில் இந்த மனப்போக்கிலிருந்து விடுபட்டு விட்டு பிறகு பெண்களைக் கேள்வி கேளுங்க சார்!
//சொன்ன பொருள் என்னான்னு பாருங்க! நடு நிலையோடு சிந்தித்து பேசுங்க//
அட, ஒரு பெரிய நடிகர் தனக்குத் திருமணம் என்ற சடங்கில் நம்பிக்கையில்லை என்று பேட்டியளிக்கலாம். எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டு உதறித்தள்ளி விட்டு வாழலாம். அதையே ஒரு நடிகை சொன்னால் உங்களுக்கெல்லாம் ரோசம் பொத்துக்கொண்டு வருகிறதா?
//பெண் சுதந்திரம் என்றால் என்ன?//
இங்கே யாரு பெண்சுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்? ஒரு பெண் சுதந்திரமாக எதையோ சொல்லப்போக அவளைப்படாத பாடுபடுத்தியது போதாதென்று அவளது உடலமைப்பையும்,அலங்காரத்தையும் பற்றி எழுதுகிற கையாலாகாத்தனத்தையும் கோழைத்தனத்தையும் புரிந்து கொள்ளுங்கள்!
//வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களுக்காக எழுதுங்கள்! விதவைக்கு மறுமனம் வேண்டும் என்று எழுதுங்கள்//
இதையெல்லாம் பெண்கள் எழுதிக்கொண்டு தானிருக்கிறார்கள். நான் எழுதியிருப்பது ஒரு பெண்ணின் மீது அவிழ்த்து விடப்பட்டிருக்கிற கீழ்த்தரமான வார்த்தைகளின் அடக்குமுறை குறித்து!
//இது போல எவ்வளவோ இருக்க
அதையெல்லாம் விட்டுட்டு தொட தெரிய உடை உடுத்துவதும் கண்டவனோட படுக்குறதும் தான் சுதந்திரமா?//
இதற்கும் பதில் இருக்கிறது என்னிடம்! ஆனால், ஆண்களைப் போல வார்த்தைகளுக்கு அழுக்கு பூசி எழுத விரும்பாததால் விட்டு விடுகிறேன்.
யாசவி said...
///நல்ல வீச்சு உள்ள கட்டுரை.
சாட்டையடியாக உள்ளன வார்த்தைகள்.//
கருத்துக்கு எனது பணிவான நன்றிகள்
//ஆனால் யாரும் புனித பிம்பங்கள் இல்லையென்பதை மறக்கவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.//
யாரையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடவும் வேண்டாம்; தரையில் போட்டு சுக்குநூறாக உடைக்கவும் வேண்டாம் என்பதே என் நிலை. சட்டப்படி தவறான காரியமாக இல்லாதவரையில், எது குறித்தும் பேச எழுத எவருக்கும் உரிமை இருக்கிறதே!
// நிறைய எழுதுங்கள் :)//
அவசியம் எழுதுவேன்; மீண்டும் நன்றி!!
துளசி கோபால் said...
//ஒரு பெண்ணை இழிவு படுத்தணுமுன்னா வேற எதுவும் யோசிக்காம நேரா அவ ஒழுக்கம் கெட்டவள் என்ற கல்லைத் தூக்கிப் போடும் குணம் இங்கே இந்தியாவில் அதுவும் குறிப்பாத் தமிழ்நாட்டில் பார்க்கிறேன்.//
சரியாகச் சொன்னீர்கள்! ஆண் கெட்டால் அது சம்பவம்; பெண் கெட்டால் அது சரித்திரமாம்! முன்பு பெண் அடுக்களையில் அடைந்து கிடந்தாள்! ஆண் சொன்னதற்கெல்லாம் தலையசைத்துக்கொண்டிருந்தாள். இப்போது, அவள் வீட்டிலும் உழைத்துக்கொண்டு, வெளியிலும் உழைத்துக்கொண்டு, விஷமிகளின் சீண்டலுக்கும் இரையாகிக்கொண்டு, இன்னும் பேசாமடந்தையாகவே இருக்க வேண்டுமாம்! :-)
//அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னா..... சொல்ற நீ அந்தக் கெட்ட இடத்துலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தே? நீ ஏன் அந்த மாதிரி இடத்துக்குப் போனே? இப்படியெல்லாம் யாரும் கேட்டுக்கமாட்டாங்க. ஒழுக்க சிகாமணி சொன்னா எல்லாரும் தலை ஆட்டி ஆமோதிக்கும் குணம்.//
அதே! அதே!!
// நான் சென்னையில் கடந்த ஜூன் முதல் ஏப்ரல் வரை இருந்தேன். எங்கேயும் 'ஆபாசமா' உடை அணிந்து வந்த எந்தப் பெண்களையும் பார்க்கலை. ஆனால் அசிங்கமா, வெட்கம், மானம் கொஞ்சம்கூட இல்லாம தெருக்களிலே இத்தனை போக்குவரத்து, ஆள் நடமாட்டம் இருக்கும் சாலைகளிலும் 'ஒன்' போகும் மாக்களைக் கண்டு மனம் நொந்தேன்.//
சினிமாவைப் பார்த்துவிட்டு பெண்களைப்பற்றி மட்டம் தட்டி எழுதுகிற இவர்களிடம் பேசி என்ன பயன் சொல்லுங்க? :-)
//இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால்........ என்னவோ போங்க...ப்ச்//
புரிந்து கொண்டேன்! :-)
நன்றிகள் பலப்பல!
தாரணி பிரியா said...
//good post :) niraiya eluthunga :)//
மிகவும் நன்றி! நிச்சயமாக எழுதுவேன்!!
Monks said...
//பருப்புக்கே வெறுப்பா ! ரொம்ப பாதிக்கப் பட்ட மாதிரி தெரியுது.
கூல் டவுன். ராஜ வம்சத்தை வழிமொழிகிறேன்//
பருப்புக்கும் ராஜவம்சத்துக்கும் எழுதிய பதிலையே உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். :-)
சின்ன அம்மிணி said...
//அருமை. குஷ்பு சொன்னது என்ன அடிப்படையில் என்று தெரிந்து கொள்ளாமல் பிதற்றுபவர்களை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.//
தான் ஊர்மேயலாம்; வருகிற பெண்டாட்டி பத்தினியாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மகான்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்? மிகவும் நன்றி! :-)
விக்னேஷ்வரி said...
//முதல் முறை வாசிக்கிறேன். தீர்க்கமான எழுத்து.//
மிகவும் நன்றி! இது எனக்கு இரண்டாவது இடுகை தானே? :-)
சுகுணாதிவாகர் said...
//உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண் திமிர்களைக் கண்டுகொள்ள வேண்டாம்.//
மிகவும் நன்றி! ஆனால், துணிச்சலான பெண்களைப் பாராட்டாமல் இருக்க மாட்டேன். :-))
தலைப்பும் அசத்தல்!
:)
Great!
In this Male Chauvinistic society, it is very difficult for a woman to express freely her views and comments, be it on any issue.
At least, I can see "such great" hearts, here in ur blog, who keep on arguing, justifying their actions and reasons.
The fact is, such men, instead of introspecting themselves, intrude the matters of women, as what they can fight on and blame them.
Keep writing! U have reflected the minds of many women.
நெத்தியடி! சாட்டையைச் சரியாகச் சுழற்றியிருகிறீர்கள்!
There are three sides of Arguments..
Your side
My side and
The Right side///////
பருப்பு, நெருப்பு மாதிரி சொன்னீங்க. ஆனா நஜிபாவோட சைடு தான் ரைட் சைடா தெரியுது. அதனால நீங்க சைடு வாங்கி அப்பீட் ஆகிடுங்க.
இன்னொரு கேள்வி, உங்க ப்ரொபைல்ல உபயோகப்படுத்தியிருக்க நடிகை நயன் தாராவா இல்லை தமன்னாவா ?
சகோதரி,
நிறைய எழுதுங்கள்.
குஷ்பு என்கிற பெண்ணாகட்டும், கமல் என்கிற ஆணாகட்டும் திருமண/இல்லற உறவுகள் குறித்த அவர்களின் கருத்துகளை ஏற்பதற்கில்லை நான்.
ஆனால், ஆணாதிக்க உலகில் ஆண் பெண் அடிப்படையில் கருத்துகளையும் பேதப்படுத்துவதற்கெதிரான உங்கள் அறச்சீற்றத்தைப் போற்றுகிறேன்.
சரியாக, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
சிறுபிராயத்தின் ஆசைகள் சிறகடித்த போதிலும், பெற்றொருக்காகவும் உடன்பிறந்தோருக்காகவும் குடும்ப பாரத்தைச் சுமக்கிற பெண்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்..
ஆண்கள் என்ன விதிவிலக்கா ??
தன்னை பெற்ற கருவறை.. ??
நல்ல உவமை. அர்த்தம் உங்களுக்கு முதலில் புரியட்டும். தன்னை பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளையும் காக்க உயிரை விடும் தன்மை கொண்ட மக்கள் இன்னும் வாழும் பூமி இது.
அந்த நடிகை வளர்ந்த சூழலில்.. அவர் இருந்த அமைப்பில்.. அவர் வாழ்ந்த விதத்தில் அவர் சொன்னது சரிதான். ஆனால் அதே நிலைதான் எல்லாருக்கும் இங்கு உள்ளதா ??
மிருகங்களை போல வாழ்ந்த ஒரு கூட்டத்தை சிறிது சிறிதாக மாற்றி, இன்று உள்ள சமூக அமைப்பை உருவாக்க 2 ஆயிரம் வருடங்கள் பத்தவில்லை. இதற்குதான் பலர் பாடு பட்டார்களா ? உங்கள் நபி உட்பட.
ஏதாவது ஒரு அமைப்பில் உண்மையாக வாழ்ந்து பாருங்கள்.. அது இஸ்லாத் ஆகட்டும் அல்லது jesus வழி ஆகட்டும், illai hidhu kalachaaram aagattum. அதை விட்டு விட்டு தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக இருந்தால், தயவுசெய்து உங்கள் மிருக தன்மையை அடுத்தவர் மீது படிய விடாதீர்கள். பாவம் அவர்களாவது மனிதர்களாக வாழ்ந்து விட்டுபோகட்டும்.
இன்று நடைமுறையில் உள்ள கட்டு பாடுகள் இல்லாவிட்டால் முதலில் பாதிக்க படபோவது பெண்கள் நீங்கள்தான். உதாரணம் வேண்டுமா.. பொங்கல் இலங்கைக்கு.. பாருங்கள் உண்மையை..
போங்கடி நீங்களும், புரிந்து கொள்ள வக்கில்லாத உங்கள் புத்தியும்..
//தீர்க்கமான எழுத்து.// வழிமொழிகிறேன்!!!
சபாஷ் நஜீபா! அப்படின்னா நீங்களும் குஷ்பு கூறும் திருமணத்திற்கு முந்தய உடலுறவை ஆதரிக்கிறீர்கள் என்று நன்கு புரிகிறது. அப்படியே தஸ்லீமா நஸ்ரின் சொன்ன கருப்பை சுதந்திரத்தையும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் பயன்படுத்த தயாரா? அல்லது பயன்படுத்தி வருகிறீர்களா? கண்ணகி பிறந்த மதுரை உங்களால் கலங்கமடையட்டும். கண்ணியத்தை போற்றும் இஸ்லாம் உங்களால் கறைபடியட்டும்.ச்சீ..
ரொம்ப சூப்பரான பதிவு! அருமை!
தீர்க்மான நிலைப்பாடு...
அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.
...... ஆணித்தரமாக சொல்லி இருக்கும் விதம், நல்லா இருக்குதுங்க...
முதலில் உங்களை அறிமுகப் படுத்திய சின்ன அம்மிணிக்கு நன்றி.
வாவ். அருமை. அழகாகக் கருத்துக்களைத் தொடுத்துள்ளிர்கள். மொழியும் விளையாடுகிறது உங்களிடம்.
ஒரு பொண்ணு சொல்ற கருத்து பிடிக்கலேன்னா கருத்தை மட்டும் குற்றம் சொல்லணும். அதை விட்டுட்டு அவளோட சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது அப்பிடின்னு நீங்க சொல்றீங்க அது இவங்களுக்குப் புரியலை. இதையே ஒரு ஆண் சொன்னா அவனைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேச மாட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பெண் கவிஞர் எழுதிய ஒரு கவிதையின் கருத்து பிடிக்காததால அவங்களைப் பத்தி தரக்குறைவா எழுதினாங்க.
இந்த பருப்பு, ராஜவம்சம், ஆடம் இவங்களுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்னு அவசியம் இல்லை. இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது.
ம்ம்...
Deepa said...
//தலைப்பும் அசத்தல்! :)//
கருத்துக்கு நன்றி சகோதரி!
//Great! In this Male Chauvinistic society, it is very difficult for a woman to express freely her views and comments, be it on any issue.//
Yes. But that should not be treated as a potential obstacle for airing your views about defamtory remarks by the so-called chauvnists.
//At least, I can see "such great" hearts, here in ur blog, who keep on arguing, justifying their actions and reasons.//
Let us hope this is an ample representation of the society being shaped for the future.
//The fact is, such men, instead of introspecting themselves, intrude the matters of women, as what they can fight on and blame them.//
The simple reason for such monotonous approach towards women is the result of the mindset that has been created over centuries..
Thanks for coming and supporting...
Keep writing! U have reflected the minds of many women.
பனங்காட்டான் said...
//நெத்தியடி! சாட்டையைச் சரியாகச் சுழற்றியிருகிறீர்கள்!//
புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி!
செந்தழல் ரவி said...
//பருப்பு, நெருப்பு மாதிரி சொன்னீங்க. ஆனா நஜிபாவோட சைடு தான் ரைட் சைடா தெரியுது. அதனால நீங்க சைடு வாங்கி அப்பீட் ஆகிடுங்க.//
பருப்பின் கருத்துக்கள் நெருப்பாய் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால்.??????? சரி போகட்டும்! :-)))
//இன்னொரு கேள்வி, உங்க ப்ரொபைல்ல உபயோகப்படுத்தியிருக்க நடிகை நயன் தாராவா இல்லை தமன்னாவா ?//
இருவரும் இல்லை; இது போன்ற பல முகங்களைப் பார்த்தும் மறந்தும் இருப்பீர்கள். நன்றி! :-)
May 23, 2010 1:38 AM
Delete
இப்னு ஹம்துன் said...
// சகோதரி, நிறைய எழுதுங்கள்.//
இன்ஷா அல்லாஹ்!
//குஷ்பு என்கிற பெண்ணாகட்டும், கமல் என்கிற ஆணாகட்டும் திருமண/இல்லற உறவுகள் குறித்த அவர்களின் கருத்துகளை ஏற்பதற்கில்லை நான்.//
அவசியமில்லை; ஆனால் கருத்து வேற்றுமைகளின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களை ஊக்குவித்தல் தவறென்பதே எனது வாதம்.
//ஆனால், ஆணாதிக்க உலகில் ஆண் பெண் அடிப்படையில் கருத்துகளையும் பேதப்படுத்துவதற்கெதிரான உங்கள் அறச்சீற்றத்தைப் போற்றுகிறேன்.சரியாக, சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.//
எனது ஆதங்கம், அரசியலில் நுழையும் ஆண்களின் கடந்தகாலத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஒரு பெண் என்றால் மட்டும் ஏன் சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதே! மிக்க நன்றி!
நம்ம மக்கள் சிலருக்கு என்ன சொன்னாலும் புரியாது. சொல்லும் கருத்தை விட்டுட்டு சொல்பவர்கள் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கத் தயங்கவே மாட்டார்கள்.
இங்கேயே அதுக்கு ஒரு உதா'ரணம்' பின்னூட்டங்களில் இருக்கு பாருங்க:(
adam said...
//ஆண்கள் என்ன விதிவிலக்கா ??//
நிச்சயமாக. பெரும்பாலான ஆண்கள் விதிவிலக்குகள் தான்!
//நல்ல உவமை. அர்த்தம் உங்களுக்கு முதலில் புரியட்டும். தன்னை பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளையும் காக்க உயிரை விடும் தன்மை கொண்ட மக்கள் இன்னும் வாழும் பூமி இது.//
அதே! தாயையும் சகோதரிகளையும் மட்டும் பொத்திப் பாதுகாத்து வைத்து விட்டு, மற்ற பெண்களை....??????
//அந்த நடிகை வளர்ந்த சூழலில்.. அவர் இருந்த அமைப்பில்.. அவர் வாழ்ந்த விதத்தில் அவர் சொன்னது சரிதான். ஆனால் அதே நிலைதான் எல்லாருக்கும் இங்கு உள்ளதா ??//
பெண்களுக்கு சூழல் மாறுபட்டிருக்கலாம். ஆனால், ஆண்களில் பெரும்பாலானோர் தான் predator என்பதை மறுக்க முடியுமா?
//மிருகங்களை போல வாழ்ந்த ஒரு கூட்டத்தை சிறிது சிறிதாக மாற்றி, இன்று உள்ள சமூக அமைப்பை உருவாக்க 2 ஆயிரம் வருடங்கள் பத்தவில்லை. இதற்குதான் பலர் பாடு பட்டார்களா ? உங்கள் நபி உட்பட. ஏதாவது ஒரு அமைப்பில் உண்மையாக வாழ்ந்து பாருங்கள்.. அது இஸ்லாத் ஆகட்டும் அல்லது jesus வழி ஆகட்டும், illai hidhu kalachaaram aagattum. அதை விட்டு விட்டு தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக இருந்தால், தயவுசெய்து உங்கள் மிருக தன்மையை அடுத்தவர் மீது படிய விடாதீர்கள். பாவம் அவர்களாவது மனிதர்களாக வாழ்ந்து விட்டுபோகட்டும்.//
இதில் மதத்தை இழுக்க வேண்டாம்! நபிகளோ, ஏசு கிறிஸ்துவோ நம்மிடையே இல்லை. மதங்களின் வேர்கள் மண்ணுக்குள்ளே இருப்பினும், கிளைகளை வெட்டிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்கள் தாம்! மறந்து விட வேண்டாம்!
இங்கே எந்த மிருகத்தனத்தைப் பற்றிப்பேசுகிறீர்கள்? ஒரு பெண்ணுக்கு ஆசைகாட்டி அவளுக்கு நோயை அளித்து அவளது வாழ்க்கையை நரகமாக்குகிற ஆண்களை மிருகம் என்று சொல்லுங்கள்! விலைமாதர்களிடம் சென்று விட்டு வரக்கூடாத நோயோடு வந்து மனைவிக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் கொடுக்கிற ஆண்களை மிருகங்கள் என்று சொல்லுங்கள்! காதல் என்ற பேரில் இளம்பெண்களை உபயோகப்படுத்தி விட்டு ஓடிப்போகிற பல வாலிபர்களை மிருகம் என்று சொல்லுங்கள்! ஆனால், பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்வது தான் இதை விட மிருகத்தனமாக படுகிறதோ? நல்ல நியாயம்!
//இன்று நடைமுறையில் உள்ள கட்டு பாடுகள் இல்லாவிட்டால் முதலில் பாதிக்க படபோவது பெண்கள் நீங்கள்தான். உதாரணம் வேண்டுமா.. பொங்கல் இலங்கைக்கு.. பாருங்கள் உண்மையை..//
கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் மட்டும் என்னவாம்? போரில் வெற்றி பெற்றால் ஆடுமாடுகளைப் போல பெண்களை ஓட்டிக்கொண்டு வந்து தொழுவத்தில் கட்டிய மன்னர்கள் காலத்திலும் இவை நடந்திருக்கின்றன.
//போங்கடி நீங்களும், புரிந்து கொள்ள வக்கில்லாத உங்கள் புத்தியும்..//
நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம்! இனி உங்கள் பாடு திண்டாட்டம் தான் தம்பி!
கெக்கே பிக்குணி said...
//தீர்க்கமான எழுத்து.// வழிமொழிகிறேன்!!!
கருத்துக்கு நன்றி!
நிஜாம் நியூஸ்.., said...
// சபாஷ் நஜீபா! அப்படின்னா நீங்களும் குஷ்பு கூறும் திருமணத்திற்கு முந்தய உடலுறவை ஆதரிக்கிறீர்கள் என்று நன்கு புரிகிறது.//
ஏன்யா, குஷ்புன்னா உங்களுக்கு உடலுறவு மட்டும் தான் ஞாப்கம் வருமா? ஒரு பெண்ணின் உறுப்பைப் பற்றி வெட்கம் கெட்டு எழுதித் திட்டுகிற ஆண்களைக் கேட்க வக்கில்லை?
//அப்படியே தஸ்லீமா நஸ்ரின் சொன்ன கருப்பை சுதந்திரத்தையும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் பயன்படுத்த தயாரா?//
இதுவும் கொழுப்பெடுத்த ஆணாதிக்கத்தின் திமிர்! இங்கே ஓழுக்கத்தைப் பற்றி யார் பேசினார்கள்? உங்கள் அம்மா, உங்கள் சகோதரியின் உடலுறுப்பைப் பற்றி ஒரு ஆண் குறிப்பிட்டு விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள்?
//அல்லது பயன்படுத்தி வருகிறீர்களா? கண்ணகி பிறந்த மதுரை உங்களால் கலங்கமடையட்டும். கண்ணியத்தை போற்றும் இஸ்லாம் உங்களால் கறைபடியட்டும்.ச்சீ..//
ஆஹா, வந்திட்டாங்கய்யா கண்ணகியைப் பற்றிப் பேச! நீங்களெல்லாம் கோவலர்களாகவே இருங்கள்! ஆனால், பெண்கள் மட்டும் கண்ணகியாக இருக்கணும்! இதற்கு மார்க்கத்தை வேறு இழுக்கிறீர்களாக்கும்...போய்யா, போய் பொழைப்பைப் பாரு!
அபி அப்பா said...
//ரொம்ப சூப்பரான பதிவு! அருமை!//
கருத்துக்கு நன்றி சகோதரரே!
அகல்விளக்கு said...
//தீர்க்மான நிலைப்பாடு...//
கருத்துக்கு மிக்க நன்றி!
Chitra said...
//...... ஆணித்தரமாக சொல்லி இருக்கும் விதம், நல்லா இருக்குதுங்க...//
கருத்திட்டு ஊக்குவித்தமைக்கு நன்றி சகோதரி!
முகிலன் said...
//முதலில் உங்களை அறிமுகப் படுத்திய சின்ன அம்மிணிக்கு நன்றி.//
அவர்களுக்கு நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
//வாவ். அருமை. அழகாகக் கருத்துக்களைத் தொடுத்துள்ளிர்கள். மொழியும் விளையாடுகிறது உங்களிடம்.//
மிக்க நன்றி!
// ஒரு பொண்ணு சொல்ற கருத்து பிடிக்கலேன்னா கருத்தை மட்டும் குற்றம் சொல்லணும். அதை விட்டுட்டு அவளோட சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது அப்பிடின்னு நீங்க சொல்றீங்க அது இவங்களுக்குப் புரியலை. இதையே ஒரு ஆண் சொன்னா அவனைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேச மாட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பெண் கவிஞர் எழுதிய ஒரு கவிதையின் கருத்து பிடிக்காததால அவங்களைப் பத்தி தரக்குறைவா எழுதினாங்க.//
இந்த நிலைப்பாடு வர வேண்டும் என்று தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். கட்டவிழ்த்துக் கொண்டு ஓடுவதில் உள்ள அபாயங்களை அறியாதவர்கள் அல்லர் பெண்கள்! புரிதலுக்கு மிகவும் நன்றி!
//இந்த பருப்பு, ராஜவம்சம், ஆடம் இவங்களுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்னு அவசியம் இல்லை. இவங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது.//
மீண்டும், மீண்டும் புரிதலுக்கு மிகவும் நன்றி! நம்பிக்கை பிறந்திருக்கிறது.
தமிழன்-கறுப்பி... said...
//ம்ம்...//
:-)
முகிலனின் கருத்துகளே எனதும். அம்மிணியின் அறிமுகமாய் இங்கே வந்தேன். உறுதியான எழுத்துகளில் தெளிவான பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.! திசை திருப்பும் நோக்கங்களில் பின்னூட்டங்கள் வரலாம். புறக்கணியுங்கள். பதில் எழுதி நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
விரிவாக இல்லையெனினும் இதுகுறித்த என்னுடைய சிறியதொரு பகிர்வு இது.. http://www.aathi-thamira.com/2010/04/vs.html குறித்து.
ப்ருப்பு!
நடிகையும் ஒரு வீட்டில் பெண் தான்!
ஒரு டாக்டர்கிட்ட போய் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு பெக் போடுவது தவறா என்ரால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பார், அதற்காக எல்லாரும் ஒரு பெக்கு போட சொல்லுறார்ன்னு அர்த்தமில்லை!
திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைத்து கொள்வது அவர்களது தனிபட்ட விரும்பம், இதில் உன் வீடென்ன , என் வீடென்ன?, குஷ்பு சொன்னா எல்லாரும் ரோட்ல திரியுங்கன்னு அர்த்தமா!?
அந்த உறவு கொள்ளும் உடனிருக்கும் ஆண் திருமணம் செய்யாதவன் தான்! அவனுக்கு கற்பு எங்கேயும் இல்லையா!? பெண்ணுக்கு மட்டும் உடம்பில் ஒட்டியிருக்கா!?
நீங்க சொல்றதை பார்த்தா நடிகைகள் எப்படி வேணும்னாலும் நாசமா போகலாம், மற்ற பெண்கள் குத்துவிளக்கா இருக்கனும்னு சொல்றா மாதிரி இருக்கு!
சீதை மாதிரி பொண்டாட்டி எதிர்பார்க்குறவன் மொதல்ல ராமனா இருக்கனும்!, இங்க எந்த பெண்ணும் குஷ்பு சொல்லிட்டான்னு ரோட்ல வந்து நிக்கல! பெண்னுக்கு மட்டும் என்னாங்கடா கற்புன்னு தான் கேக்குறாங்க!
உங்க மனசாட்சிக்கு மொதல்ல ராமனா இருந்துட்டு பெண்களை பற்றி பேச வாங்க!
பின்னூட்டங்களையும் உங்கள் பதில்களையும் பார்த்தேன். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் இருக்கின்றன உங்கள் வாதம். வீணர்களுக்கு பதில் சொல்வதைக் குறைத்துக்கொண்டு இன்னும் எழுதுங்கள்! செந்தழல் ரவி, ஆதிமூலகிருஷ்ணன், வால்பையன் மற்றும் பலரது பின்னூட்டங்களைப் பாராட்டுகிறேன். வால்ஸ் உங்கள் கருத்து 1000% சரி!
போட்டு தாக்குங்க
i feel pity for you najeebaa.
i wont say what the pseudo-cultural policemen did/said as right. at the same time the statement of the so called "ஜெயித்து விட்ட பெண்" shows her uncivilized nature. itha puriyaatha maathiri nadikkiravangalukku puriya vaikkirathu siramam
அவரது கருத்துக்களோடு முழுமையாக உடன்படாவிட்டாலும், அவரது துணிச்சல் எனைக் கவர்ந்தது.
பெண்ணை முடக்க அவளின் ஒழுக்கத்தைக் குறிவைப்பதென்ற இழிந்த வழக்கத்தைக் குறித்து நானும் இந்தப் பதிவில் கூறியுள்ளேன்.
அஹிம்சை ஆயுதம்
நல்ல பதிவு அக்கா,
ஆனால் நான் குஷ்புவின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. ஏனெனில் ஒரு ஆணாகிய நான் என் திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளப் போவதில்லை. வைத்துக்கொள்ளக் கூடாது என பதினான்கு வயதிலிருந்தே முடிவு செய்தவன். இன்னும் பின்பற்றி வருபவன். இதே விதி நான் மணக்கப்போகும் பெண்ணுக்கும் பொருந்துமல்லவா? ஆணுக்கு என கருதப்படும் கொள்கைகள், உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும் என வாதிடும் தாங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
குஷ்பு பெண்கள் திருமணத்துக்குமுன் உடலுறவு வைத்துக்கொள்வதை சட்டபூர்வமாக்கியிருக்கின்றார். எனக்கொரு சந்தேகம்... ஒரு சில இஸ்லாம் நாடுகளைத் தவிர்ந்த மற்றைய எந்த நாட்டில் பெண்கள் திருமணத்துக்குமுன் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது எனக் கூற முடியுமா? எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் சமூகம்தான் அதைத் தவறாகப் பார்க்கிறது. நீங்களோ நானோ குஷ்புவோ சமூகத்தை சட்டத்தால் திருத்த முடியாது. அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமையாக்கப்படுதல் சட்டவிரோதமாக்கப்பட்டது. ஆனால் இன்றும் வெள்ளையர்கள் (ஒருசிலரைத் தவிர) கறுப்பர்களை சக பிறவிகளாக மதிப்பதில்லை.
அதேபோல்தான் எல்லா ஆண்களும் கோவலர்கள் அல்ல. அதே போல் எல்லாப் பெண்களும் கண்ணகிகள் அல்ல. இருபாலரிலும் கீழ்த்தரமானவர்கள் தாராளமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. கணவன் இறந்த மனைவிமார்களில் கணவனின் இறப்புக்குப் பின் காமவயப்படாதவர் ஒருவரை உங்களால் காட்ட முடியுமா?
ஆண்கள் பெண்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்கிறீர்கள். அதே ஆண்கள் தங்களை பார்க்கமாட்டார்களா என விரும்பி அரையும் குறையுமாக அணியும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும்.
சகோதரி,
//ஏன்யா, குஷ்புன்னா உங்களுக்கு உடலுறவு மட்டும் தான் ஞாப்கம் வருமா? ஒரு பெண்ணின் உறுப்பைப் பற்றி வெட்கம் கெட்டு எழுதித் திட்டுகிற ஆண்களைக் கேட்க வக்கில்லை?//
ஆண்கள் மட்டுமா பெண்களின் உறுப்பைப்பற்றி கேவலமாக எழுதுகிறார்கள்? லீனா மணிமேகலை ஒரு ஆணா? அல்லது அலியா?
//உங்கள் அம்மா, உங்கள் சகோதரியின் உடலுறுப்பைப் பற்றி ஒரு ஆண் குறிப்பிட்டு விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள்? //
அது விமர்சிப்பவனின் கருத்தைப் பொறுத்தது. ஒரு டாக்டர் விமர்சிப்பதற்கும் கீழ்த்தரமான ஆணினத்தின் கேவலங்கள் விமர்சிப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?
//ஆஹா, வந்திட்டாங்கய்யா கண்ணகியைப் பற்றிப் பேச! நீங்களெல்லாம் கோவலர்களாகவே இருங்கள்! ஆனால், பெண்கள் மட்டும் கண்ணகியாக இருக்கணும்! //
சகோதரி, முதலில் நாங்கள் அனைவரும் கோவலர்கள் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். முஹம்மது நபி ஒரு ஆண்தானே?
//இந்த நிலைப்பாடு வர வேண்டும் என்று தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். கட்டவிழ்த்துக் கொண்டு ஓடுவதில் உள்ள அபாயங்களை அறியாதவர்கள் அல்லர் பெண்கள்! புரிதலுக்கு மிகவும் நன்றி!//
பெண்கள் மட்டுமல்ல, பல இதயமுள்ள ஆண்களின் நிலைப்பாடும் அதுதான் என்பது பல பெண்களுக்குத் தெரிவதில்லை.
வால்பையனோட கருத்தை வாசிச்சுப் பாருங்க. இப்படிப்பட்டவங்கதான் நிஜமான ஆண்கள். மற்றவர்களை தயவுசெய்து ஆண்கள் என அழைக்காதீர்கள்.
கற்பாவது மண்ணாங்கடி ஆவது ..
இந்த இடுகையை சீதாம்மா போன்ற பல பெண்பதிவர்களுக்கு நானே சிபாரிசு செய்திருந்தேன்.
தலைப்பில் எனக்கு சற்று ஆட்சேபணை இருந்தாலும், கருத்தில் பெரிதாக மாறுபாடு இல்லை. ஆணோ, பெண்ணோ அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து கூறுவது தான் முறையே தவிர, அவரது அவயங்களைக் குறித்து கேலி செய்வதும், அவரது கடந்தகால வாழ்க்கையை விமர்சித்து எழுதுவதும் போக்கிரித்தனம் என்பது எனது உறுதியான நம்பிக்கை! ஒரு வலைப்பூ இருந்தால் என்ன கண்றாவியை வேண்டுமானாலும் எழுதலாமோ? இதில் நான் பெரிதும் மதிக்கிற சில பதிவர்களும் கழிசடை வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருப்பது அருவருப்பாக இருக்கிறது.
சரி, குஷ்பு பற்றிப் பேசுவதை விட்டு உங்கள் இடுகை, அதற்கு வந்த கருத்துக்கள் பற்றி சுருக்கமாக எனது கருத்து.
ஏதோ எழுதினோம் என்று விட்டு விடாமல், எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு, தான் கொண்ட நம்பிக்கை சரியோ, தவறோ பதிலளிக்க துணிவு வேண்டும். சில நாட்களுக்கு முன்னர், யமுனா ராகவன் என்ற ஒரு பதிவர் ’காட்சி’ வலைப்பதிவில், ஆண்களை விமர்சனம் செய்வதாக எண்ணிக்கொண்டு, அருவருப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் இருக்கிறார்! டோண்டு ராகவன் பார்வதி அம்மாள் குறித்து எழுதிய பதிவுக்கு ஆட்சேபணைகள் கிளம்பியபோது அவர் ஒவ்வொரு கருத்துக்கும் பதிலளித்திருந்தார். அந்த துணிவு யமுனா ராகவனுக்கு இல்லை போலும்! ஆனால், உங்களுக்கு இருக்கிறது. அதற்காக இந்த இடுகையை மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.
சும்மா ஆண்களைத் திட்டுவது தான் பெண்ணியம் என்றில்லை! அதே சமயம் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் ஒழுக்கத்தை போதிக்கிற போலித்தனத்தையும் காறி உமிழத்தான் வேண்டும். அதையும் இங்கே நீங்கள் நாகரீகமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
சேட்டைக்காரன் என்ற பெயரை வைத்துக்கொண்டு, சர்ச்சையில் இறங்க வேண்டாமே என்று யோசித்தேன்-சுயநலத்தோடு! பண்பாடு, கலாச்சாரம் என்று குதிக்கிற ஆண்கள் யோக்கியர்களானால் அதுவே பெண்களுக்கு பாதுகாப்பை உருவாக்கும் என்று உறுதியாக நம்புவதால், உங்களது கருத்தை வழிமொழிகிறேன்.
’கற்புநிலையென்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்,’ என்று பாரதியார் சொல்லியிருக்கிறார். ஆணோ, பெண்ணோ அவரவருக்கு எது நன்மை பயக்கும் என்பதை அறிந்து செயல்படுத்த வல்லவர்கள். அப்படியே சமூகம் செல்லட்டும் என்பதே எனது அவா.நன்றி!
வேண்டுகோள்: இந்த கருத்துக்கும், இந்த இடுகைக்கு இனி வரப்போகும் கருத்துக்களுக்கும் பதிலெழுத நேரத்தைச் செலவிடாமல் அடுத்த இடுகையை எழுதுங்கள்! உங்களுக்குள் ஒரு பொறி இருப்பதை உணர முடிகிறது சகோதரி!
உங்கள் பதிவைப் பற்றி இதில் எழுதி உள்ளார்கள். (நல்ல விதமாகத்தான்)
link:
http://www.aathi-thamira.com/2010/05/blog-post_26.html
எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை எனினும், நான் ஆபாசமாகவோ இல்லை அருவெருப்பாகவோ எந்தக் கருத்தும் எழுதவில்லை என நினைக்கிறேன். உங்கள் கருத்தை நீங்க சொன்னிர்கள், எனக்கு தென்பட்ட விஷயத்தை நான் சொன்னேன்.
இன்னும் நெறைய எழுதுங்க...தத்தம் கருத்தை பரிமாறிக் கொள்வோம்.
Regards,
Mohan
Post a Comment