Wednesday, March 23, 2011

இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!

இன்று வலையுலகின் போராளி சாந்தி அம்மையார் வெளியிட்டுள்ள ஒரு இடுகையை வாசித்தபோது, இவரது அறிவாற்றலையெண்ணி வியக்காமல் Justify Fullஇருக்க முடியவில்லை; அத்துடன், கொப்பளிக்கும் கோபத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிற நகைச்சுவை உணர்வையும் கூட...!

நஜீபா அக்தர் = சேட்டைக்காரன் ??

இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!

பல கூகிள் தமிழ்க்குழுமங்களில் நான்காண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். அப்படியொரு குழுமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்தபோது, "தமிழமுதம்" குழுமத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்ததே அதன் நிர்வாகியான சாந்தி அம்மையார் தான். இப்போது இப்படியொரு இடுகையை எழுதியிருப்பதன் மூலம் அவர் நிரூபித்திருப்பது - அவர் சொல்வதெல்லாம் பொய்; பொய்; பொய் தவிர வேறில்லை!

அந்தக் குழுமத்தில் ஆரம்பத்தில் இணைந்த பல உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டாலும், நான் மட்டும் கொஞ்ச நாட்கள் தாக்குப்பிடித்தேன். பெரும்பாலானோரின் கருத்துக்களோடு ஒவ்வாமை இருந்ததால், எந்தக் குழுமத்திலும் நான் அதிகம் எழுதியதில்லை. எனது வலைப்பூவிலும் அதிகம் எழுதுவதில்லை. இது வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை. தற்செயலானது; இயல்பாக நிகழ்ந்தது என்பது மட்டும் உண்மை. மேலும் எனது பணி, மேற்படிப்பு மற்றும் குடும்பத்தில் மரணம் என சில இயல்பான காரணங்கள் நான் விரும்பினாலும் எழுத அனுமதிக்கவில்லை. 2008-ல் எனது மின்னஞ்சல் களவாடப்பட்டபோது, நிறுத்தி வைத்திருந்த நான், சின்னத்துளிகளை எழுதிக்கொண்டிருப்பது கொஞ்ச காலமாகத்தான்.

வலையுலகில்தானே குழுமங்களும் இருக்கின்றன?

கூகிள் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இவரது இடுகையிலுள்ள வன்மமும், இவர் அவிழ்த்து விட்டிருக்கிற பொய்மூட்டைகளும் புதிதல்ல. ஒருவரை நட்பாக்கிக் கொள்ள தனிமடல் மற்றும் மின்னரட்டை மூலம் தொடர்பு கொள்வது, "உனக்கு யாராவது தனிமடல் எழுதுகிறார்களா? மின்னரட்டையில் என்ன பேசுகிறார்கள்?" என்று கேட்டு மிகவும் அக்கறையுள்ளவர் போல நடிப்பது; "அவன் ரொம்ப மோசம்; எப்படியெல்லாம் மடல் எழுதியிருக்கிறான் பார்," என்று யாரோ யாருக்கோ எழுதிய மடலையே அவர்களது அனுமதியில்லாமல் பிறருக்கு அனுப்புவது, அதே போல மற்றவர்களிடமிருந்து நமக்கு வருகிற மடல்களை அனுப்பச்சொல்லி நச்சரிப்பது என்று படிப்படியாகத் தனது உண்மை உருவத்தை வெளிக்கொணர்வார்.

அப்புறம், நாம் எழுதாததையும், சொல்லாததையும் சொல்லி, கோள்மூட்டி சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பார்.

இது அபாண்டமல்ல! 200 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள எந்த கூகிள் குழுமங்களிலும் இவர் இருந்திருப்பார். அங்கே விசாரித்தால், நான் கூறியவை அனைத்தும் கண்டிப்பாகச் செய்திருப்பார். (சில குழுமங்களில் அதற்கு மேலும் செய்திருப்பார்.) கடைசியாக இவர் இருந்த குழுமத்திலும் இவருக்கு நிர்வாகத்தின் சார்பில் கடும் கண்டனம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிற குழுமங்களிலிருந்து இவரை விலக்கியிருக்கிறார்கள் அல்லது விலக வற்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. இதை அவர் மறுக்கலாம்; ஆனால், இவர் இருந்த பெரும்பாலான குழுமத்தின் நிர்வாகிகளால் மறுக்க முடியாது.

ஏன், இதை வாசிக்கிறவர்கள் ஏதேனும் பெரிய குழுமத்திலிருந்தால், நான் சொல்வதை மறுக்க மாட்டார்கள்.
எல்லாக் குழுமத்திலும் நிர்வாகிகளோடு சண்டைபோடுவதில் அம்மையார் சளைத்ததேயில்லை. நிர்வாகியின் கருத்துக்கு ஒத்த கருத்து உடையவராக எவரேனும் இருந்தால், அந்த உறுப்பினர் பாடும் திண்டாட்டம் தான். பெரும்பாலான குழுமங்களில் பெண் நிர்வாகிகளும் இருக்கிறார்கள் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆக, ஆண்-பெண் என்றோ, நிர்வாகி-உறுப்பினர் என்றோ எவ்வித சலுகையும் காட்டாமல், முணுக்கென்றால் சண்டை போடுபவர் என்பதற்கான ஆதாரங்களை அந்தந்தக் குழுமங்களில் சென்று பார்க்கலாம்.

தமிழமுதம் குழுமத்தில் பல பிரபல பதிவர்கள் இருக்கின்றனர். அவர்களில் யார் சாந்தி அம்மையாரின் பக்கம் என்று அந்தக் குழுமத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சாந்தி அம்மையார் கவனத்திற்கு!

மேற்கூறியவற்றில் நான் ஒரு பொய் எழுதியிருந்தால் கூட, நீங்கள் தாய்லாந்தில் இருந்தே என்மீது வழக்குப் போட முடியும் தெரியுமா? அப்படி நான் இட்டுக்கட்டி எழுதியிருந்தால் என் மீது நீங்கள் அவதூறு வழக்குத் தொடர முடியும். (தமிழமுதம் குழுமத்திலேயே கூட வழக்குரைஞர்கள் உள்ளனர் என்பதும் எனக்குத் தெரியுமே. அதில் ஒருவரைப் பற்றிக் கூட நீங்கள் தனிமடலில் பலருக்கு.....ஞாபகம் வருகிறதா?) அட ஆமாம், ஆள்மாறாட்ட வழக்கும் போடலாம்! :-)

நெஞ்சில் துணிவும், நேர்மைத் திறனும் உள்ள பெண்மணியாயிருந்தால், cyber crime-க்கு புகார் கொடுங்கள். அவர்கள் நான் பெண்ணா, ஆணா, நஜீபாவா, சேட்டைக்காரனா, என்று கண்டுபிடிப்பதோடு நீங்கள் பசுவா, பசுத்தோல் போர்த்திய புலியா என்பதையும் தெளிவுபடுத்த உதவி செய்வார்கள்.

உங்களது மின்னஞ்சல்/மின்னரட்டை விளையாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சாட்சியாக வரவும் தயார்!
உங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தருகிறேன். Buzz-லும் வலைப்பதிவிலும் வீரத்தைக் காட்டுகிற நீங்கள், சட்டப்படி என் மீது புகார் அளியுங்கள். முடியாவிட்டால் பகீரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள்!

இது எனது பகீரங்கமான சவால்! தயாரா?

அன்புள்ளங்களே!

சட்டபூர்வமாக இது ஒரு ஆவணமாகக் கருதப்படும் என்பதால், பின்னூட்டமிடும் வசதியை எடுத்திருக்கிறேன். ஆர்வக்கோளாறில் எவரெனும் எதையோ எழுதி, சாந்தி அம்மையார் என் மீது புகார் கொடுத்தால், அதில் அவர்களும் சம்பந்தப்படுவதை நான் விரும்பவில்லை. புரிதலுக்கு நன்றி!