Tuesday, March 8, 2011

தொப்பிதொப்பி-தலையில் இடிவிழ...!

தமிழோடு உறவாடுகிற தருணங்களை அளிக்கிற இந்த இணையத்தில் சில அருவருப்புக்கணங்களுக்குள் ஆட்பட நேர்ந்து விடுவதும் உண்டு. அத்தகைய ஒரு உறுத்தலை இன்று உணர்வதற்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட பெரும்பாலான இடுகைகளிலிருந்து மாறுபட்டதாய், அதிமேதாவித்தனமாய், அரைகுறையாய், அவசர அவசரமாய் எழுதப்பட்ட "உலக மகளிர் தினம்- இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த " என்ற ஒரு இடுகை ஏற்படுத்தியிருக்கிறது. நரகலைத் தீண்டிய அருவருப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், இது போன்ற இடுகைகளுக்கு எதிர் இடுகை எழுதுவதில் தவறில்லை என்றே உணர்கிறேன்.

தொப்பிதொப்பியின் பதிவின் ஒவ்வொரு பத்திக்கும் பதிலளித்து இதை நீளமாக்கவோ, வாசிக்கிறவர்களின் நேரத்தை விரயமாக்குவதோ எனது குறிக்கோள் அன்று. அவருக்கு உலக மகளிர் தினத்தின் வரலாறு கூட தெரியவில்லை என்பதை தனது இடுகையின் முதல்பத்தியிலேயே வெளிப்படையாக்கியிருக்கிறார். அவ்வகையில், அந்த இடுகை ஒரு எதிர் இடுகை எழுத உகந்ததுதானா என்ற கேள்வியும் எழாமலில்லை. பிரபலங்களோடு மோதி பிரபலமடைய விரும்புகிற முயற்சியாகவும் இதனைப் பிறழ்ந்து காண வாய்ப்பிருப்பதையும் உணர்கிறேன். இருப்பினும், எழுதாமல் இருந்தால், சரியானதைச் செய்யாத தவறைச் செய்ததாகும் வாய்ப்புள்ளது.

தொப்பிதொப்பி என்ற இந்த அதிபுத்திசாலி உதிர்த்திருக்கிற சில அற்புதமான கருத்துக்கள்:

1. ஆணின் சுயமரியாதையை அழிந்துவருகிற விலங்குகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இதை வாசித்துப் பின்னூட்டமிட்ட ஆண்களில் ஒருவர் கூட (நான் இறுதியாகப் பார்த்தவரையிலும்) இதை ஆட்சேபிக்கவில்லை. ஒருவேளை, தொப்பிதொப்பியின் கூற்றுப்படி அவர்கள் தம்மை விலங்குகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் போலும்.

2. பெண்ணுக்கு உரிமை வழங்கியதால், இன்று உலக நாடுகளின் சதியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது.

கிழக்கு இந்தியக் கம்பனி இந்தியாவுக்கு வந்து ஆக்கிரமித்ததற்கு பெண்ணுரிமைதான் காரணமோ?

3. இந்தியாவைப் பிடித்த ஊழல் என்னும் சீரழிவுக்கு பெண் என்ற பேய்தான் காரணம். (இதற்கு சான்றாக, பல பெண் அரசியல்வாதிகளின் படங்களைப் போட்டு வாசிக்க வந்தவர்களை பிரமிக்க வைத்திருக்கிறார் தொப்பிதொப்பி!)

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி, முதல் பிரதமர், இந்திய மாநிலங்களின் முதல் முதலமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். எத்தனை பெண்கள்?

இப்படி, ஒன்று, இரண்டு, மூன்று என்று பட்டியலிட்டவருக்கு, தாத்தா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறதாம். "இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த."

இப்படி அரைகுறையாகத் தகவல்களை வைத்துக்கொண்டு, பெண்களை இழிவாகப் பேசுபவர்களைப் பற்றி என் பாட்டி சொன்னது: இவனுங்க தலையிலே இடிவிழ...!"

அடுத்து ஆண்களே சிந்தியுங்கள் (?!) என்று ஒரு அறைகூவல் விடுத்து, அதிலே......

ஆண்களுக்கு உரித்தான இடத்தில், தங்களது கவர்ச்சியைப் பயன்படுத்தி பெண்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களாம்.

இந்த இடுகைக்குப் பின்னூட்டம் போட்ட பதிவர்கள் மட்டுமின்றி, தொப்பிதொப்பிக்கு ஒத்து ஊதுகிற புண்ணியவான்கள் இனிமேல் சினிமா நடிகைகளின் மார்புப்பிளவும், தொப்புளும் தெரிகிற படம்போட்டு இனிமேல் இடுகை எழுத மாட்டார்கள் என்று நம்புவோமாக. உங்களுக்குத்தான் பெண்களின் கவர்ச்சி வெறுப்பூட்டுகிறதே; அப்புறம் எதற்கு அத்தகைய படங்களை உபயோகப்படுத்துகிறீர்கள்?

தொப்பிதொப்பியின் தாத்தா காலத்தில் பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள். தொப்பிதொப்பியின் பாட்டி, எப்போது தாத்தா அழைத்தாலும் போய்ப்படுத்து, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். வீடுகூட்டி சுத்தம்செய்து, துணிதுவைத்து, சமைத்துப்போட்டு, மாமியார் மாமனார் படுக்கையில் போகிற பீயைத் துடைத்துக்கொண்டிருக்க வேண்டும். தாத்தா குடித்துவிட்டு வந்து நடுத்தெருவில் போட்டு உதைத்தால், பாட்டி அழுதுகொண்டு, அலறாமல், திருப்பி அடிக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இப்போது, இந்தக்கதையில் உள்ள பல சம்பவங்கள் மாறாமல் இருப்பதாவது தெரியுமா? பிறகு, என்ன மாறியிருக்கிறது? இப்போது பெண் வெளியே போகிறாள்; ஆணுக்கு நிகராய் பணம் ஈட்டுகிறாள். அவனைப்போலன்றி, சம்பாதித்த பணத்தைச் சேமித்து, குடும்ப எதிர்காலத்தை சமைக்கிறாள். அது இவர்கள் கண்களை உறுத்துகிறதோ?

ஆமாய்யா, நீங்கள் போட்டிருப்பதுபோல, பெண்கள் புகைபிடிக்கிறார்கள்; மதுவருந்துகிறார்கள். இன்னும் இருக்கிறது உங்களது வயிற்றில் கலக்கம் ஏற்படுத்த! ஆனால், இவற்றைச் செய்யுமளவுக்குத்தூண்டுதலை ஏற்படுத்துகிற சூழலை உருவாக்கியது ஆணா பெண்ணா?

இந்தியாவின் எந்தச் சட்டமும் பெண்கள் புகைபிடிப்பதோ, மதுவருந்துவதோ கூடாது என்று சொல்லவில்லை. பெரும்பாலான பெண்கள், தங்களுக்குக் கிடைக்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும்போது, விதிவிலக்காக சில பெண்களும் தவறான வழிக்குப்போகத்தான் செய்வார்கள். அதை சட்டமே கேட்காதபோது, வேறு யார் கேட்பது?

போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்கடா!

இன்று பல பிரபல பெண்பதிவர்களின் இடுகைகளை வாசித்தேன். இந்த இடுகையையும் வாசித்து, சிலரிடம் மின்னரட்டையிலும், சிலரிடம் மின்னஞ்சலிலும், உள்ளூர்வாசிகளிடம் தொலைபேசியிலும் சொன்னேன். ஆனால், அவர்களுக்கு எதிர் இடுகை எழுதமுடியாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு பொதுவான காரணம் இருந்தது. "தொப்பிதொப்பி ஒரு லூஸு! கண்டுக்காதீங்க!!"

சரி, அவங்களை விட்டு விடலாம்!

"ஐயோ, என் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்துக்காக போராடுகிற அழகு இவ்வளவுதான்! இந்த மாதிரி சில பெண்களால் தான் வலையுலகில் பெண்களை மட்டம்தட்டி எழுதுகிற துணிச்சல் பலருக்கு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

தொப்பிதொப்பிக்கு ஒரு வேண்டுகோள்! ஒருநாள் அவர் தன்வீட்டுப்பெண்களோடு பிறிதொரு சந்தர்ப்பதில் உட்கார்ந்து, அவர்கள் வெளியே தெருவில் போய்வருவதற்குள் படுகிற இம்சைகளை, பார்வைத்துகிலுரிதல்களை, வார்த்தைகளாலான வன்புணர்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வாராக. இதுகுறித்து இன்னும் விபரமாக எழுதலாம்!

பெண்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தொப்பிதொப்பியையும், அந்த இடுகைக்குப் போய் ஆஜர் போட்ட தொப்பிதொப்பியின் தோழர்களையும், பெண் பதிவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

நான் இப்படிச் சொல்வதை வாசித்து பலர் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். இது நடக்காமலும் போகலாம். அதனால், நஷ்டம் எங்களுக்கு, அதாவது பெண்களுக்கு அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இறுதியாக......நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் தொப்பிதொப்பி!

எங்களைத் தடுத்து நிறுத்துகிற வல்லமை உங்களுக்கோ, உங்களது ஜால்ராக்களுக்கோ கிடையாது.

மகளிர் உலகம் மலர்ந்தே தீரும்! பாவம் நீங்கள்!!!

56 comments:

Yoga.s.FR said...

என்னங்க ஒங்கள பெத்தாங்களா?செய்ஞ்சாங்களா?????????தொப்பி,தொப்பி!?

சேட்டைக்காரன் said...

இது வேணாம் அக்கா! எடுத்திருங்க!
It is not worth & you got better things to do!

தனி காட்டு ராஜா said...

//ஆமாய்யா, நீங்கள் போட்டிருப்பதுபோல, பெண்கள் புகைபிடிக்கிறார்கள்; மதுவருந்துகிறார்கள். இன்னும் இருக்கிறது உங்களது வயிற்றில் கலக்கம் ஏற்படுத்த! ஆனால், இவற்றைச் செய்யுமளவுக்குத்தூண்டுதலை ஏற்படுத்துகிற சூழலை உருவாக்கியது ஆணா பெண்ணா?

இந்தியாவின் எந்தச் சட்டமும் பெண்கள் புகைபிடிப்பதோ, மதுவருந்துவதோ கூடாது என்று சொல்லவில்லை.//


உண்மைய ஒத்துகிட்டதுக்கு நன்றி..

பொதுவாக ஆணுக்குள் ஒரு பெண் உண்டு ...பெண்ணுக்குள் ஒரு ஆண் உண்டு ....
ஆண் ,பெண் வேறுபாடு என்பது வெறும் உடம்பை வைத்து மட்டும் அல்ல...

பெண்ணுக்குள் உள்ள ஆண் ...ஆண் என்று சொல்ல படுபவனை விட மோசமானவள்....

இப்போது பெண்ணியம் என்பது பெண்ணுக்குள் உள்ள ஆணைதான் தூண்டி விடுகிரார்கள்...

பெண்ணுக்குள் உள்ள பெண்(மை) அழிந்து வருகிறாள்....

ஆணுக்குள் உள்ள ஆணும் ...பெண்ணுக்குள் உள்ள ஆணும் தான் எப்போதும் சண்டை போட்டு கொள்ளுவார்கள் ....
சண்டை என்பது ஆணின் இயல்பு ....
அதே போல் ஆணுக்குள் உள்ள பெண்ணும் ...பெண்ணுக்குள் உள்ள ஆணும் ஈகோ பிரச்சினையால் சேர்ந்து வாழாமல் பிரிந்தே வாழுவார்கள் ...(விவாகரத்து)...

ஆணுக்குள் உள்ள ஆணும் .....பெண்ணுக்குள் உள்ள பெண்மையும் எப்போதும் சேர்ந்து இணக்கமாகவே வாழ விரும்புவார்கள் ....அதுதான் இயல்பு
ஆண் என்று பெண் தனி தனியே 100 % இங்கு யாரும் இல்லை ....

so ....ஆண் பெண் சண்டை என்பது முட்டாள்கள் செய்யும் வேலை ..

Ambedhan said...

உங்களது வலைப்பூவை (பிரச்சனையை கிளப்பிய குஷ்பு இடுகையிலிருந்து) இன்றுதான் வாசித்தேன். உங்களுடைய எழுத்துக்கள் கூர்மையாக ஈட்டி போல் பாய்கின்றன. நன்றாக இருக்கிறது. தமிழ் நதியின் வலைப் பூ படித்திருக்கிறீர்களா?

தொப்பி தொப்பிக்கும் உங்களுக்குமிடையேயான (வார்த்தைப்)போர், ஆண்களுக்கும் பெண்களுக்கு மிடையேயான போராக ஒரு நாள் மாறக்கூடும். ஏனென்றால் சமூகத்தில் ஆணும் பெண்ணும் வாழும் வெளி ஒன்றேதான் என்றாகிப் போனது இப்போது.

தொப்பி தொப்பியின் இடுகை ஆழ்ந்து பார்க்காமல் பெண்கள் மீது மேம்போக்காக சில குற்றச்சாட்டுகளை வைக்கிறது. பெண்கள் மேல் வெறுப்பை உமிழ்கிறது.

அதை வெறும் உளறலாகவும் எடுத்துக்கொள்ளலாம். பெண்களும் சமம் என்கிற உரிமைப் போரில் ஆண்கள் அடையும் பாதிப்புகளின் வெளிக்குமுறலாகவும் அதை நான் பார்க்கிறேன்.(இதற்கு நான் சராசரி ஆண் என்பதும் காரணமாக இருக்கலாம்).

எனது நண்பர் ஒருவர் கேட்டார் "பெண்கள் தினம் போல் ஏன் ஆண்கள் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவதில்லை. ஆண்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா ?" என்று. நான் சொன்னேன் "எடுத்துக் கொள்ளலாம்" என்று. வேறு என்ன சொல்வது ?

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப ஓவர் தாக்குதலா இருக்கே மேடம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சேட்டைக்காரன் சொல்வது சரி

சௌமியா said...

அந்த இடுகையை நானும் வாசித்தேன். இணையம் என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்களோ? சே!

அவர் செய்திருப்பது "சட்டப்படி குற்றம்" தெரியுமா?

அவர் இந்தியாவில் இருந்தால், ஒரு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போதும்.

இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்!

புவனேசுவரி said...

நாய் கடித்தால் நாம்தான் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விடுங்கள்!

புவனேசுவரி said...

//அவர் இந்தியாவில் இருந்தால், ஒரு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் போதும். //

அதெல்லாம் அவசியமேயில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்! (நல்ல மாடாக இருந்தால்...!)

நா.மணிவண்ணன் said...

தாக்குதல் சரியே

THOPPITHOPPI said...

ஓ நீங்கள் பெண்ணா உங்கள் பதிவை படித்த பின்புதான் உங்கள் profile பார்த்தேன்.
சேட்டைக்காரன் உங்களை அக்கா என்று அழைத்த போதே உங்கள் மேல் சிலர் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தேன்.

நான் எழுதாத வரிகளை நீங்களாக எழுதி அதற்க்கு நீங்களே பதில் சொல்லி இருப்பது......

//1. ஆணின் சுயமரியாதையை அழிந்துவருகிற விலங்குகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.//
//2. பெண்ணுக்கு உரிமை வழங்கியதால், இன்று உலக நாடுகளின் சதியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது.//
//3. இந்தியாவைப் பிடித்த ஊழல் என்னும் சீரழிவுக்கு பெண் என்ற பேய்தான் காரணம். //

நீங்கள் மேலே எழுதி இருந்த மூன்று முக்கியமான வரிகளும் அதற்கு நீங்கள் என்னை தாக்கி எழுதி இருந்ததும் இந்த பதிவை இதுவரை படித்த யாரும் அதை கவனிக்காமல் கருத்து சொன்னதும் வருத்தமே. மேலே இருக்கும் வரிகள் ஒன்று கூட நான் எழுதியது இல்லை.

பெண் என்பதால் விட்டுவிடுகிறேன் மரியாதைய காப்பாத்திக்கோ. எதிர்ப்பதிவு எழுதுகிறேன் என்று லூசு மாதிரி எழுதிவிட்டு நான் எழுதியதாக என்னை முட்டாள் போல் சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம் முட்டாள் பெண்ணே.

மேலே இருக்கும் வரிகள் நான் எழுதியதாக நிரூபித்தால் நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன். நான் இவ்வளவு மரியாதையா உங்களுடைய இந்த பின்னூட்டத்திற்கு பதில் அழித்ததே சேட்டைக்காரன் அழைத்த அந்த அக்கா என்ற ஒரு வார்த்தைக்காகத்தான்.


//தொப்பிதொப்பியையும், அந்த இடுகைக்குப் போய் ஆஜர் போட்ட தொப்பிதொப்பியின் தோழர்களையும், பெண் பதிவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.//

இவ்வளவு கேவலமான ஒரு பெண்ணை இதுவரை நான் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை. ஒரு பதிவை எழுதவேண்டும் என்றால் அதில் எப்படிப்பட்ட வரிகளை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் நீ... சரி நீங்க வேண்டாம் பொழச்சி போங்க.

நஜீபா said...

//சேட்டைக்காரன் உங்களை அக்கா என்று அழைத்த போதே உங்கள் மேல் சிலர் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தேன்.//

பின்னே..? எல்லாரும் உங்களைப் போலவா இருப்பார்கள்...? :-))

//நீங்கள் மேலே எழுதி இருந்த மூன்று முக்கியமான வரிகளும் அதற்கு நீங்கள் என்னை தாக்கி எழுதி இருந்ததும் இந்த பதிவை இதுவரை படித்த யாரும் அதை கவனிக்காமல் கருத்து சொன்னதும் வருத்தமே. மேலே இருக்கும் வரிகள் ஒன்று கூட நான் எழுதியது இல்லை.//

ஹா ஹா! எடுத்து விட்டீர்களா...? அவ்வளவு கோழையா நீங்கள்...? :-)

//பெண் என்பதால் விட்டுவிடுகிறேன் மரியாதைய காப்பாத்திக்கோ. எதிர்ப்பதிவு எழுதுகிறேன் என்று லூசு மாதிரி எழுதிவிட்டு நான் எழுதியதாக என்னை முட்டாள் போல் சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம் முட்டாள் பெண்ணே. //

இதை வாசிக்கிற மற்றவர்களுக்கு உங்களது தரம் நன்கு புலப்படும் தொப்பிதொப்பி. நான் முட்டாளாக இருப்பது இருக்கட்டும். வலிய வந்து உங்களது மோசடியை அம்பலப்படுத்திய உங்கள் புத்திசாலித்தனத்துக்கு எனது வாழ்த்துகள்.

//மேலே இருக்கும் வரிகள் நான் எழுதியதாக நிரூபித்தால் நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன். //

கவலைப்படாதீர்கள். நீங்கள் தமிழகத்தில் இருந்தால், எங்களது முதல் வேலையே நீங்கள் இனி பதிவு எழுதாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது தான். பொறுத்திருந்து பாருங்கள்!

//இவ்வளவு கேவலமான ஒரு பெண்ணை இதுவரை நான் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை. ஒரு பதிவை எழுதவேண்டும் என்றால் அதில் எப்படிப்பட்ட வரிகளை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் நீ... சரி நீங்க வேண்டாம் பொழச்சி போங்க.//

உங்களது தரம் குறித்து அடுக்கடுக்காக இவ்வளவு ஆதாரங்களை தருவதற்கு மிக்க நன்றி. இவையெல்லாம் நாளைக்கு உங்களுக்கு எதிராக பேசும். தயாராக இருங்கள்.

நஜீபா said...

கருத்து வழங்கிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் பதில் அளிக்க கடமைப் பட்டிருக்கிறேன். எனினும், தனது மோசடி வேலையை இங்கு வந்து மறைமுகமாக ஒப்புக்கொண்ட தொப்பிதொப்பிக்கு முதல் பதில் எழுதியதன் காரணம்...நீங்கள் அவரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான்.

அனைவருக்கும் எனது நன்றிகள்.

சேட்டை, இதை விடுவதாக இல்லை தம்பி. தவறாக என்ன வேண்டாம்.

THOPPITHOPPI said...

சாக்கடை பண்ணியே நான் தமிழ்நாட்டில் தான் இருக்கேன் உன்னால் முடிஞ்சத பார்த்துக்கோ.

சேட்டைக்காரன் said...

//THOPPITHOPPI said...

சாக்கடை பண்ணியே நான் தமிழ்நாட்டில் தான் இருக்கேன் உன்னால் முடிஞ்சத பார்த்துக்கோ.//

தொப்பிதொப்பி! இதுவரை நான் நடுநிலையிலிருந்தேன். இப்போது உங்களது வரம்பு மீறிய பின்னூட்டங்களைக் கண்டபிறகு எனது கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.

நீங்கள் உபயோகிக்கிற வார்த்தைகளின் கீழ்மை உங்களது மனத்தின் ஆழத்திலிருக்கிற அழுக்கையும், வக்கிரத்தையும் நன்கு புலப்படுத்துகிறது. நீங்கள் மென்மேலும் தவறு இழைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் இடுகையிலிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை அகற்றியிருக்கிறீர்கள். சுத்த பேடித்தனமான செயல் இது. திருத்தப்படாத உங்களது இடுகைகளின் ஆதாரங்கள் இணையத்தில் நிரம்ப இருக்கின்றன என்பதையும், நீங்கள் உபயோகித்திருக்கிற வார்த்தைகள் ஆட்சேபிக்கத்தக்கவை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களது இடுகைகளில் எழுதுவது போல, பிறரது வலைப்பூக்களில் எழுதுவதையும் நிறுத்துங்கள். ஆபத்தை விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள். இணையத்தில் உங்களது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதாரம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

இதுவிஷயமாக உங்களுக்கு எதிராக ஏதேனும் செய்ய வேண்டிவந்தால், நான் அவசியம் இவர்களுக்குத் துணையாயிருப்பேன். இது நிச்சயம்.

THOPPITHOPPI said...

@ சேட்டைக்காரன்
@ சாக்கடை பண்ணி

உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சேட்டைக்காரன் எனக்கு உன் மேல் தான் சந்தேகம். பெண் பெயரில் வேறு ஒரு வலைத்தளத்தை தொடங்கி என்னை தாக்கி எழுத முயற்சி செயவ்வதாக.

இருக்கட்டும் முடிந்ததை செய் நீதான் அந்த சாக்கடை பண்ணியா என்று பிறகு பார்ப்போம்.

problogger said...

" பெண்கள் நாட்டின் கண்கள் " இத சொன்னது கண்ணதாசா ஜேசுதாசா

சேட்டைக்காரன் said...

//உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

நான் உன்னை மாதிரி "ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்," என்று இடுகைபோட்டுவிட்டு, பிடிக்காத பின்னூட்டங்களை அகற்றிவிட்டு, தனிமடலில் என் வலைப்பதிவுக்கு வராதே என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து யாரை வரவேண்டாம் என்று சொன்னாயோ, அவனைப் பற்றியே எழுதிப் பதிவு நடத்துகிறவன் அல்ல!

//சேட்டைக்காரன் எனக்கு உன் மேல் தான் சந்தேகம். பெண் பெயரில் வேறு ஒரு வலைத்தளத்தை தொடங்கி என்னை தாக்கி எழுத முயற்சி செயவ்வதாக.//

தான்திருடி பிறரை நம்பாள் என்பது எவ்வளவு சரியாக இருக்கிறது.

//இருக்கட்டும் முடிந்ததை செய் நீதான் அந்த சாக்கடை பண்ணியா என்று பிறகு பார்ப்போம்.//

அனேகமாக, உன் பிறப்பிடம் சாக்கடையாக இருக்கும்போலிருக்கிறதுடே! இங்கு கண்ணியமானவர்கள் வந்து போகிறார்கள். உன்னளவுக்கு என்னால் தரமிறங்க முடியாது; அது இங்கு சரிவராது.

உன்னையும் ஒரு புரட்சிக்கார எழுத்தாளன் என்று நம்பிப் பின்னால் வருகிறதே ஒரு கூட்டம்; அவர்களைப் பார்த்து சிரிக்கிறேன். :-))

Yoga.s.FR said...

இந்த தொப்பி தொப்பி ஏதோ காந்தியோ,காமராஜரோ அல்ல!உண்மையைச் சொன்னால் பசுத்தோல் போர்த்திய...................பன்னாடை!இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரும் இதே போல் தான் ஒண்டிக்கு ஒண்டி வாறியா என்று கைலியைத் தூக்கி கட்டியவர்!கசப் போக்கிலி என்பது இவர் போன்றவர்களைத் தான்!

நாஞ்சில் வேணு said...

அவர் ஒரு இடுகை எழுதினார்; நீங்க ஒரு இடுகை எழுதினீங்க! அத்தோட விடுங்க! அவர் உபயோகிக்கிற வார்த்தைகளிலிருந்தே, அவர் எப்பேர்ப்பட்ட ஆசாமின்னு புரிஞ்சுக்கணும். துஷ்டரைக் கண்டால் தூர விலகு. இனி, அடுத்த இடுகையை எழுதறது பத்தி யோசியுங்க! காலம் பொன்னானது!

Ambedhan said...

தொப்பி தொப்பி,
உங்களது வலைப்பூவில் நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். உங்களுக்கு பெண்கள் மேல் வெறுப்பு இருந்தால் வெளிப்படையாகக் கொட்டலாம். கொட்டியிருக்கீங்க. சரி.

உங்கள் கருத்தை எழுத உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை நஜீபாவுக்கும் உண்டு அவர் அதை மறுக்க, அவர் கருத்தைப் பதிவு செய்ய. அவருடைய வார்த்தைகளில் நையாண்டியும், குத்தலும் இருந்தாலும் அவர் உங்களை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. நஜீபாவின் கட்டுரையில் சிறிது நெருடலான வரிகள் 'உங்களது வீட்டில் உள்ள பெண்களுடன்' என்று தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டி பேச ஆரம்பித்தது. அந்த வரிகளில் தவறாக உங்களை அவர் விமர்சிக்கவில்லை எனினும் பொது விவாதங்களில் தனிப்பட்ட சுட்டிக் காட்டல் தேவையற்றது. முன்னே பின்னே தெரியாதவர்களுடன் பேசும்போது தவிர்க்க வேண்டியது. ஆனாலும் நஜீபாவின் கட்டுரையில் அவருடைய கருத்துக்களை நேர்மையாகத்தான் வைத்திருக்கிறார்.

அந்தக் கிண்டலையும், நையாண்டியையும் பொறுத்துக் கொள்ள உங்களுக்கு முடியவில்லை என்றால் அதே ரீதியில் உங்களின் 'மேலான' கருத்துக்களை உங்கள் வலைத்தளத்தில் இடலாம். தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் பொதுவாகப் பெண்களைச் சாடலாம். அவர்களின் தவறு என்று நீங்கள் கருதுவதைப் பற்றி பதிவு எழுதலாம். அது தான் பெண்ணியத்தின் எதிர்ப்பாளராக நீங்கள் செய்ய வேண்டியது. அதற்குப் பலரும் பதில் தருவார்கள். சூடான விவாதமாக அது இருக்கும். தனிப்பட்ட தாக்குதலாக இருக்காது.

தனிப்பட்ட முறையிலான தாக்குதல் விவாதத்தின் முதல் எதிரி. அது கண்டிப்பாக இருக்கக் கூடாது.

அதை விடுத்து பன்றி என்று படிக்காத பாமரன் போல குழாயடிச் சண்டையில் நீங்கள் இறங்கியது பெரிய தவறு. இதை யாரும்விரும்ப மாட்டார்கள். உண்மையிலேயே சிந்திப்பவராக நீங்கள் இருந்தால் இந்த மாதிரி ரவுடித்தனமாய் பின்னூட்டம் இடமாட்டீர்கள். அப்படிப் பின்னூட்டம் இட்டதன் மூலம் நீங்கள் ஒரு முட்டாள் என்று எல்லோருக்கும் தெளிவாக விளக்கி விட்டீர்கள்.

தயவு செய்து உங்களின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிடில் பெண்கள் மேல் வெறும் வெறுப்பை மட்டுமே உமிழத் தெரிந்த, சிந்திக்கும் உணர்வற்ற ஆண்கள் மத்தியில் மட்டும் நீங்கள் ஹீரோவாய் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள். அது மட்டுமே உங்களுக்குப் போதுமென்றால்..

இல்லை. நான் பெரிய ரவுடியாக்கும் என்கிற ரீதியில் நீங்கள் பேச ஆரம்பித்தால் ரவுடிக்கும் நிறைய ரவுடிகள் இருக்கவே இருக்கிறார்கள். அது வலைப் பதிவர்கள், அறிவுத் தேடல், கருத்துப் பரிமாற்றம் என்கிற இணைய தளத்தின், வலைப் பூக்களின் நோக்கத்தைத் தாண்டியது. அந்த ரவுடி அனுபவத்தை நீங்களே அனுபவித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அது பற்றி நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

உங்கள் வலைத்தளத்தில் வந்து படிக்க, உங்களின் புதுமையான கருத்துக்களை தெரிந்து கொள்ள மற்றவர்கள் ஆர்வமாய் வரவேண்டும். நான் இனி உங்கள் தளத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

Ambedhan said...

//தொப்பி தொப்பி ஒரு லூஸூ அதைக் கண்டுக்காதீங்க//
என்கிற நஜூபாவின் வரிகளும் பொதுவான கிண்டலாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதலாக இருப்பதைப் பார்த்தேன்.

தனி காட்டு ராஜா said...

Click

முகமூடி said...

உள்ள வரலாமா?

1.தொப்பி இடுகையில் நான் சிலது ஏற்றுகொள்ளக்கூடியது சிலது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தேன்.
2. தொப்பியின் எழுத்துநடை தற்போது ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை.
3. அந்த பதிவை கண்டிக்காமல் இருப்பதால் அதில் பின்னுட்டமிட்டவர்கள் அதை ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை.
4. நீங்கள் நியாயமாகதான் பதில் தந்து உள்ளிர்கள்.
5. இந்த விளையாட்டு வினையாக மாற போகிறது என்பதால் நான் ஆட்டத்தில் இல்லை.

நன்றி

முகமூடி

எல் கே said...

தொப்பி தொப்பி

உளறலுக்கு ஒரு அளவு இருக்கிறது. பதிவுலகில் மிக கண்ணியமாக எழுதுபவர் என்று பெயர் எடுத்தவர் சேட்டை. தேவை இல்லாமல் அனைவர் மேலும் சேற்றை வாரி இறைக்க வேண்டாம்

எல் கே said...

@சேட்டைக்காரன்
நண்பரே! விடுங்கள்.

டக்கால்டி said...

" பெண்கள் நாட்டின் கண்கள் " இத சொன்னது கண்ணதாசா ஜேசுதாசா //

:-)

Rendu perume illai. Athai sonnathu chinnappadas

டக்கால்டி said...

நண்பர் தொப்பி தொப்பி அவர்களே, இந்த மாதம் என்ன உரண்டை இழுக்கும் மாதமா உங்களுக்கு?
எழுத இன்னும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு பாஸ்.

Akash said...

நஜீபா சரியான பதிலடி கொடுத்து இருக்கின்றீர்கள்.சாபஷ்.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

நஜீபா said...

கருத்து எழுதிய அனைவருக்கும் எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொப்பிதொப்பியின் பதிவுக்குச் சென்று அவரது கருத்துக்கு எதிரான கருத்தைச் சொல்பவர்களின் பின்னூட்டங்களை அவர் உடனடியாக நீக்கிவருகிறார். எனவே, அவரை இனிமேலும் இங்கே கருத்துச் சொல்ல அனுமதிக்க இயலாது. கருத்துச்சுதந்திரத்தைப் பின்பற்றாதவர்களுக்கு அதை மற்றவர்கள் அளிக்க வேண்டிய அவசியமில்லை. (அதிலும் அவரது கண்ணியமற்ற பின்னூட்டங்களை, இனியும் அனுமதிக்க இயலாது.)

மற்ற கருத்துக்களுக்கு, எனது பதிலை எழுதுவேன். இப்போது, இந்த இடுகை தொடர்பாக சில முக்கியப்பணியில் ஈடுபட்டிருப்பதால், தாமதம். பொறுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்!

அஞ்சா சிங்கம் said...

உங்கள் கருத்துக்கு முழுவதும் உடன்படுகிறேன் ...............
சாக்கடைக்குள் இருக்கும் பன்றியை துரத்த நாமும் சாக்கடைக்குள் இறங்க வேண்டுமா என்ன ?
ஒரு கல்லை விட்டு எறிந்தால் போதும் ..................

raja said...

ஒரு வாசகன் என்ற எனது கருத்துக்கள்.. தொப்பி தொப்பி என்பவர். ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி.. அதுமட்டும் இருந்தால் பரவாயில்லை. அவர் மிக மோசமான பாசிச கருத்துக்களை தொடர்ந்து முன் வைக்கிறார். பச்சையப்பன் கல்லூரியை இடித்தே ஆகவேண்டும், மாற்று கருத்து கொண்டோர் வாழவே கூடாது, சீமான் அரசியல் கொள்கைகள் இருக்கவே கூடாது. என்பன போன்ற மிக மோசமான எழுத்துக்களை தொடர்ந்து விஷ கிருமிகள் போல பரப்பி கொண்டே இருக்கிறார். உயர்ந்த மனிதர்களின் கூற்றுக்கு நாம் மரியாதை கொடுக்கலாம்.. இப்படிப்பட்ட கீழான சிந்தனை கொண்ட மனித விஷகிருமிகளை நீங்கள் வேறு வழியில் தான் சந்திக்கவேண்டும்... அது நிச்சியம் [பதில் இடுகையோ அல்லது.. மாற்று கட்டுரையோ அல்ல.

Anonymous said...

inge ponga ungala pathi vivaatham nadakkuthu

http://ragariz.blogspot.com/2011/03/blog-post_11.html

ஜெய்லானி said...

யாராவது எதாவது தவறா எழுதினா அங்கேயே கருத்து சொல்லலாம் ..கமெண்ட் மாடரேஷன் போட்டிருந்தால் இல்லை பப்லீஷ செய்யாவிட்டால் . அவங்க ஜால்ராவுக்கு மட்டுமே தலியாட்டின்னு விட்டுட்டு வர வேண்டியதுதான் .. இதுக்குன்னு தனியா எதிர் பதிவு போடுவது வீண் வேலை..... தேவையிலலத டென்ஷன் எதுக்கு :-)

சிலர் அங்கும் தலையாட்டி விட்டு இங்கும் வந்து தலையாட்டுவார் . பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா. போன வருடமும் இதே மாதிரி வேற ஒரு இடத்தில் நடந்தது..

விடுங்க ..முடிஞ்சா இந்த பதிவை டெலிட் செய்துடுங்க ..:-))

பயணமும் எண்ணங்களும் said...

"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நீங்கள் எல்லோர் பதிவிற்கும் சென்று ஆதரவு தந்ததுண்டா இப்படி..?.

கோபமென்றாலும் நிதானமாக பேசணும் நஜீபா..

நிற்க..

எனக்கும் தொப்பி யின் பதிவு பிடிக்கவில்லை.. ஆனால் அது வேணுமென்றே மகளிர் தினத்தில் போடப்பட்டதால் வம்பு செய்யவே போட்டதாக எண்ணி நான் தவிர்த்தேன்..

மற்றபடி ஆணாதிக்கத்தனதோடு எழுதப்பட்டது.. புரியாதவர்களிடம் புரிய வைப்பதும் கூட நேர விரயம்..

பயணமும் எண்ணங்களும் said...

அதில் செங்கோவியின் இன்னும் சிலர் பின்னூட்டம் பெண்களுக்கு ஆதரவாகவே இருந்தது .. அதையும் நீங்க கவணிக்கணும்..

நஜீபா said...

முதலில் ஒரு பொதுப்படையான பதில். நான் மிக மிகக் குறைவாக எழுதுகிறேன். பெண்ணியவாதி என்ற முத்திரை எனக்கு வேண்டாம். இயல்பாய் எழுகிற ஆத்திரத்தை, இயன்றவரை பொதுப்பார்வையில் வைக்கத்தக்க அளவிலேயே எழுத முனைந்திருக்கிறேன். எனது கருத்தை ஒத்த கருத்தினை உடையவகளுக்கும், அதை இங்கே துணிந்து வெளிப்படுத்தியவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சேட்டைக்கும், சௌமியாவுக்கும் இந்த இடுகை காரணமாய் ஏற்பட்ட சில இடைஞ்சல்களுக்காக வருந்துகிறேன். இனி ஒவ்வொருவருக்கும் பதில்..!

நன்றிகள் கோடி!

நஜீபா said...

Yoga.s.FR said...

என்னங்க ஒங்கள பெத்தாங்களா?செய்ஞ்சாங்களா?????????தொப்பி,தொப்பி!?

இதை அங்கு கேட்டிருந்தீர்கள்; அது நீக்கப்பட்டிருந்தது என அறிந்தேன். நன்றி!

நஜீபா said...

//தனி காட்டு ராஜா said...

உண்மைய ஒத்துகிட்டதுக்கு நன்றி..பொதுவாக ஆணுக்குள் ஒரு பெண் உண்டு ...பெண்ணுக்குள் ஒரு ஆண் உண்டு ....ஆண் ,பெண் வேறுபாடு என்பது வெறும் உடம்பை வைத்து மட்டும் அல்ல...

நான் மருத்துவத்துறையில் இருக்கிறேன். என்னிடமே உடற்கூறு குறித்துச் சொல்கிறீர்களா? பெண்ணியம் என்பது புரட்சியல்ல என்பது ஓரளவு சுயசிந்தனை உள்ளவர்களுக்குத் தெரியும்.

//பெண்ணுக்குள் உள்ள பெண்(மை) அழிந்து வருகிறாள்....//

ஹா..ஹா! இதையே ஆண்கள் குறித்து சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிப்படி கூறினால், மிகவும் வருத்தப்படுவீர்கள். :-))

//so ....ஆண் பெண் சண்டை என்பது முட்டாள்கள் செய்யும் வேலை ..//

இதை மகளிர் தினத்தன்று பொதுப்படையாக பெண்களைக் குறிவைத்து எழுதிய சிந்தனாவாதியிடம் சொல்லுங்க! நன்றி!

நஜீபா said...

//Ambedhan said...

உங்களது வலைப்பூவை (பிரச்சனையை கிளப்பிய குஷ்பு இடுகையிலிருந்து) இன்றுதான் வாசித்தேன். உங்களுடைய எழுத்துக்கள் கூர்மையாக ஈட்டி போல் பாய்கின்றன. நன்றாக இருக்கிறது. தமிழ் நதியின் வலைப் பூ படித்திருக்கிறீர்களா?//

நான் இணையத்தில் அதிகம் வாசிப்பதில்லை. புத்தக ஈடுபாடு மட்டுமே.

// தொப்பி தொப்பிக்கும் உங்களுக்குமிடையேயான (வார்த்தைப்)போர், ஆண்களுக்கும் பெண்களுக்கு மிடையேயான போராக ஒரு நாள் மாறக்கூடும். ஏனென்றால் சமூகத்தில் ஆணும் பெண்ணும் வாழும் வெளி ஒன்றேதான் என்றாகிப் போனது இப்போது.//

யாரும் அப்படியொரு போர் அவசியமில்லை. ஆனால், பொதுவெளியில் பெண்களைப் பொதுப்படையாக இழித்து எழுதியது உறுத்தியதால் எனது கருத்துக்களை பதிவு செய்தேன்.

//எனது நண்பர் ஒருவர் கேட்டார் "பெண்கள் தினம் போல் ஏன் ஆண்கள் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவதில்லை. ஆண்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா ?" என்று. நான் சொன்னேன் "எடுத்துக் கொள்ளலாம்" என்று. வேறு என்ன சொல்வது ?//

நானும் மகளிர் தினம் குறித்தெல்லாம் இடுகை எழுதவில்லை. எழுதப்பட்ட இடுகைகளில், ஆதரித்து எழுதியவைகளிலும் எனக்கு சில ஆட்சேபங்கள் இருந்தன. ஆனால், இந்த விமர்சனம் கண்மூடித்தனமான எதிர்மறைக் கருத்துகளை உள்ளடக்கிய ஒரு இடுகைக்கு என்றளவிலே இதை பார்க்க வேண்டும் என கோருகிறேன். மிக்க நன்றி!

நஜீபா said...

//சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப ஓவர் தாக்குதலா இருக்கே மேடம்//

எங்கே? அங்கேயா? இங்கேயா? :-)

நஜீபா said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

சேட்டைக்காரன் சொல்வது சரி//

நன்றி!

நஜீபா said...

//நா.மணிவண்ணன் said...

தாக்குதல் சரியே//

மிக்க நன்றி!

நஜீபா said...

problogger said...

" பெண்கள் நாட்டின் கண்கள் " இத சொன்னது கண்ணதாசா ஜேசுதாசா?

இப்போது சொன்னது நீங்க தான்! :-)

நஜீபா said...

//Yoga.s.FR said...

இந்த தொப்பி தொப்பி ஏதோ காந்தியோ,காமராஜரோ அல்ல!உண்மையைச் சொன்னால் பசுத்தோல் போர்த்திய...................பன்னாடை!இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரும் இதே போல் தான் ஒண்டிக்கு ஒண்டி வாறியா என்று கைலியைத் தூக்கி கட்டியவர்!கசப் போக்கிலி என்பது இவர் போன்றவர்களைத் தான்!//

யாரும் உத்தமர்களாய் இருக்க வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால், இது போன்ற கருத்துக்களை ஆதரித்து எழுத இருக்கிற உரிமை, எதிர்க்கவும் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஒரு முயற்சியே எனது இடுகை. மிக்க நன்றி! தொடர்ந்து வருக!

நஜீபா said...

//நாஞ்சில் வேணு said...

அவர் ஒரு இடுகை எழுதினார்; நீங்க ஒரு இடுகை எழுதினீங்க! அத்தோட விடுங்க! அவர் உபயோகிக்கிற வார்த்தைகளிலிருந்தே, அவர் எப்பேர்ப்பட்ட ஆசாமின்னு புரிஞ்சுக்கணும். துஷ்டரைக் கண்டால் தூர விலகு. இனி, அடுத்த இடுகையை எழுதறது பத்தி யோசியுங்க! காலம் பொன்னானது!//

அப்பாடா! இங்கே ஒரு பூகம்பம் நடந்ததிலும் ஒரு நன்மையிருக்கிறது ஐயா. நீங்கள் வந்து விட்டீர்களே! வருகைக்கு ரொம்பவும் நன்றி! உங்களைப் போலவே பலரும் சொல்லியிருக்கிறார்கள். மிக்க நன்றி!

நஜீபா said...

/Ambedhan said...

தொப்பி தொப்பி, உங்களது வலைப்பூவில் நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். உங்களுக்கு பெண்கள் மேல் வெறுப்பு இருந்தால் வெளிப்படையாகக் கொட்டலாம். கொட்டியிருக்கீங்க. சரி.

உங்கள் கருத்தை எழுத உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை நஜீபாவுக்கும் உண்டு அவர் அதை மறுக்க, அவர் கருத்தைப் பதிவு செய்ய. அவருடைய வார்த்தைகளில் நையாண்டியும், குத்தலும் இருந்தாலும் அவர் உங்களை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. நஜீபாவின் கட்டுரையில் சிறிது நெருடலான வரிகள் 'உங்களது வீட்டில் உள்ள பெண்களுடன்' என்று தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டி பேச ஆரம்பித்தது. அந்த வரிகளில் தவறாக உங்களை அவர் விமர்சிக்கவில்லை எனினும் பொது விவாதங்களில் தனிப்பட்ட சுட்டிக் காட்டல் தேவையற்றது. முன்னே பின்னே தெரியாதவர்களுடன் பேசும்போது தவிர்க்க வேண்டியது. ஆனாலும் நஜீபாவின் கட்டுரையில் அவருடைய கருத்துக்களை நேர்மையாகத்தான் வைத்திருக்கிறார்.

அந்தக் கிண்டலையும், நையாண்டியையும் பொறுத்துக் கொள்ள உங்களுக்கு முடியவில்லை என்றால் அதே ரீதியில் உங்களின் 'மேலான' கருத்துக்களை உங்கள் வலைத்தளத்தில் இடலாம். தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் பொதுவாகப் பெண்களைச் சாடலாம். அவர்களின் தவறு என்று நீங்கள் கருதுவதைப் பற்றி பதிவு எழுதலாம். அது தான் பெண்ணியத்தின் எதிர்ப்பாளராக நீங்கள் செய்ய வேண்டியது. அதற்குப் பலரும் பதில் தருவார்கள். சூடான விவாதமாக அது இருக்கும். தனிப்பட்ட தாக்குதலாக இருக்காது.//

மிக்க நன்றி! நானும் எனது நலவிரும்பிகளும் சொல்ல விரும்பியதையெல்லாம் தெள்ளத்தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அவர் எதிர் இடுகையும் எழுதியிருக்கிறார். அது குறித்து இன்னொரு பதிவர் இன்னொரு பதிவரின் இடுகையில் பெருமைவேறு பட்டுக்கொண்டிருக்கிறார். :-))

//தொப்பி தொப்பி ஒரு லூஸூ அதைக் கண்டுக்காதீங்க//
என்கிற நஜூபாவின் வரிகளும் பொதுவான கிண்டலாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதலாக இருப்பதைப் பார்த்தேன்.//

உண்மை! இதைத் தவிர்ப்பேன். வருந்துகிறேன்.

நஜீபா said...

//முகமூடி said...

உள்ள வரலாமா?

1.தொப்பி இடுகையில் நான் சிலது ஏற்றுகொள்ளக்கூடியது சிலது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி இருந்தேன்.
2. தொப்பியின் எழுத்துநடை தற்போது ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை.
3. அந்த பதிவை கண்டிக்காமல் இருப்பதால் அதில் பின்னுட்டமிட்டவர்கள் அதை ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை.
4. நீங்கள் நியாயமாகதான் பதில் தந்து உள்ளிர்கள்.
5. இந்த விளையாட்டு வினையாக மாற போகிறது என்பதால் நான் ஆட்டத்தில் இல்லை.

நன்றி//

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! உங்கள் கருத்துக்களுக்கு மிக மிக நன்றி!

நஜீபா said...

//எல் கே said...

உளறலுக்கு ஒரு அளவு இருக்கிறது. பதிவுலகில் மிக கண்ணியமாக எழுதுபவர் என்று பெயர் எடுத்தவர் சேட்டை. தேவை இல்லாமல் அனைவர் மேலும் சேற்றை வாரி இறைக்க வேண்டாம்//

மிகவும் நன்றி! இதில் மற்றவர்களை இழுத்திருப்பது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. புரிதலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி

நஜீபா said...

//டக்கால்டி said...

நண்பர் தொப்பி தொப்பி அவர்களே, இந்த மாதம் என்ன உரண்டை இழுக்கும் மாதமா உங்களுக்கு? எழுத இன்னும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு பாஸ்.//

எழுதினால் மகிழ்ச்சியே! மிக்க நன்றி!

நஜீபா said...

/Akash said...

நஜீபா சரியான பதிலடி கொடுத்து இருக்கின்றீர்கள்.சாபஷ்.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! இன்னும் முழுமையாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

நஜீபா said...

//அஞ்சா சிங்கம் said...

உங்கள் கருத்துக்கு முழுவதும் உடன்படுகிறேன் ...............சாக்கடைக்குள் இருக்கும் பன்றியை துரத்த நாமும் சாக்கடைக்குள் இறங்க வேண்டுமா என்ன ?ஒரு கல்லை விட்டு எறிந்தால் போதும் ..................//

இது எதிர் இடுகை என்பதைக் காட்டிலும், இது போன்ற கருத்துக்களில் எதிர்காலத்தில் சிறிதே நாகரீகமும் சேர்தல் வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு எனக்கொளலாம்.

நஜீபா said...

//raja said...

ஒரு வாசகன் என்ற எனது கருத்துக்கள்.. தொப்பி தொப்பி என்பவர். ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி.. அதுமட்டும் இருந்தால் பரவாயில்லை. அவர் மிக மோசமான பாசிச கருத்துக்களை தொடர்ந்து முன் வைக்கிறார். பச்சையப்பன் கல்லூரியை இடித்தே ஆகவேண்டும், மாற்று கருத்து கொண்டோர் வாழவே கூடாது, சீமான் அரசியல் கொள்கைகள் இருக்கவே கூடாது. என்பன போன்ற மிக மோசமான எழுத்துக்களை தொடர்ந்து விஷ கிருமிகள் போல பரப்பி கொண்டே இருக்கிறார். உயர்ந்த மனிதர்களின் கூற்றுக்கு நாம் மரியாதை கொடுக்கலாம்.. இப்படிப்பட்ட கீழான சிந்தனை கொண்ட மனித விஷகிருமிகளை நீங்கள் வேறு வழியில் தான் சந்திக்கவேண்டும்... அது நிச்சியம் [பதில் இடுகையோ அல்லது.. மாற்று கட்டுரையோ அல்ல.//

உண்மையில் நான் இணையத்தில் அத்துணை பழக்கமில்லாமல், எப்போதாவது எழுதுகிற வழக்கத்தை வைத்திருக்கிறேன். கவனத்தைக் கவர்ந்து, எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து, எரிச்சலூட்ட முயன்றதைக் கண்டித்திருக்கிறேன். மற்றபடி, உங்களது புரிதலுக்கும், விபரமான பின்னூட்டத்துக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

நஜீபா said...

//ஜெய்லானி said...

யாராவது எதாவது தவறா எழுதினா அங்கேயே கருத்து சொல்லலாம் ..கமெண்ட் மாடரேஷன் போட்டிருந்தால் இல்லை பப்லீஷ செய்யாவிட்டால் . அவங்க ஜால்ராவுக்கு மட்டுமே தலியாட்டின்னு விட்டுட்டு வர வேண்டியதுதான் .. இதுக்குன்னு தனியா எதிர் பதிவு போடுவது வீண் வேலை..... தேவையிலலத டென்ஷன் எதுக்கு :-)//

அங்கு எதிர்க்கருத்துக்கள் நீக்கப்படுகின்றன. அதனால், இப்படியொரு இடுகை தேவைப்பட்டது. அங்கும் சில ஆண்கள் பெண்களை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்; ஆனால், கண்டித்திருக்கலாம்.

// சிலர் அங்கும் தலையாட்டி விட்டு இங்கும் வந்து தலையாட்டுவார் . பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா. போன வருடமும் இதே மாதிரி வேற ஒரு இடத்தில் நடந்தது..//

புரிந்து கொண்டிருக்கிறேன். இந்த இடுகைக்குப் பிறகு வருகிற தனிமடல்கள், குறுஞ்செய்திகள், அவை சுமந்து வருகிற அறிவுரைகள் அனைத்தும் எனது இணைய அறிவை விசாலப்படுத்தி வருகின்றன என்றே சொல்லலாம். மிக்க நன்றி!

நஜீபா said...

/பயணமும் எண்ணங்களும் said...

"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?//

அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.

//நீங்கள் எல்லோர் பதிவிற்கும் சென்று ஆதரவு தந்ததுண்டா இப்படி..?.//

இப்படி கவனத்தை ஈர்க்கிற மாதிரி தலைப்பு வைத்தால் நிச்சயம் ஆதரவோ, எதிர்ப்போ செய்வேன்.

//கோபமென்றாலும் நிதானமாக பேசணும் நஜீபா..//

இதை சொல்வது யார்? சாந்தி அம்மையாரா? அனேகமாக இதை எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வந்திருக்கும் என்று ஊகிக்கிறேன். :-)))

//எனக்கும் தொப்பி யின் பதிவு பிடிக்கவில்லை.. ஆனால் அது வேணுமென்றே மகளிர் தினத்தில் போடப்பட்டதால் வம்பு செய்யவே போட்டதாக எண்ணி நான் தவிர்த்தேன்..//

அது தான் ஊரறிந்த விஷயமாயிற்றே! உங்களைப் பற்றி எழுதியிருந்தால், உடனே ஆள் சேர்த்து ஆரவாரம் செய்து பெரிய சர்ச்சையை உருவாக்கியிருப்பீர்கள். மற்ற பெண்களைப் பற்றி எழுதினால் உங்களுக்கு என்ன வந்தது?

//அதில் செங்கோவியின் இன்னும் சிலர் பின்னூட்டம் பெண்களுக்கு ஆதரவாகவே இருந்தது .. அதையும் நீங்க கவணிக்கணும்..//

சிலர் ஆதரவு தெரிவித்திருத்திருக்கின்றனர். இன்னும் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படிக் கண்டிப்பாகச் சொன்னவை நீக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் அனைவரும் அறிவர்.

நிற்க!

நான் ஏன் உங்களுக்கு இவ்வளவு கடுமையாக பதில் அளித்திருக்கிறேன் என்று மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனது இடுகை குறித்து நீங்கள் Buzz-ல் எழுப்பிய கேள்விகளும், சொன்ன கருத்துக்களும் எனக்குத் தெரியும்.

என்னால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதைப் பற்றி நீங்கள் தாராளமாக Buzz-ல் எழுதி மகிழுங்கள்! ஆனால், என்னால் செய்ய முடியாதது ஒன்று இருக்கிறது - உங்களைப் போல சுயநலத்துக்காக மற்றவர்களையும் இழுத்து அவர்களது மானத்தையும் சந்திசிரிக்க வைப்பது என்னால் முடியாது. Buzz-ல் ஒருமாதிரியும், வெளியில் ஒருமாதிரியும் கருத்துப்போட்டு இரட்டை வேடம் புனைகிற பாசாங்கையும் என்னால் செய்ய முடியாது.

வந்தீங்க; கருத்து சொன்னீங்க! மிக்க நன்றிங்க!

நஜீபா said...

அன்புள்ளங்களே...இனி இவ்விடுகை குறித்து வருகிற பின்னூட்டங்களுக்கு பதில் எழுத இயலாது. விரைவில் அடுத்த இடுகையோடு சந்திக்கிறேன். நன்றி...